உள்துறை அமைச்சகம்
சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய காவல் துறை அகாடமியில் பயிற்சி
Posted On:
11 DEC 2024 4:11PM by PIB Chennai
"காவல் துறை" என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் பட்டியல்-II (மாநிலப் பட்டியல்) கீழ் வரும் மாநிலப் பொருளாகும். காவல்துறையினருக்கு பயிற்சி அளிப்பது மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்களின் முதன்மையான பொறுப்பாகும்.
சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல்துறை அகாடமியை பொருத்தவரை, இது ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு அடிப்படை மற்றும் பணியிடை பயிற்சி வகுப்புகளை வழங்குகிறது . இது தவிர , நாட்டிலுள்ள மாநில காவல்துறை அகாடமிகளின் திறனை மேம்படுத்துவதிலும், நட்பு ரீதியான அண்டை நாடுகளின் காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதிலும் இது முக்கிய பங்காற்றி வருகிறது.
புதிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதைக் கருத்தில் கொண்டு, இந்த சட்டங்கள் ஐபிஎஸ் அதிகாரிகளின் பயிற்சி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
காவல்துறையில் வளர்ந்து வரும் சவால்களைக் கருத்தில் கொண்டு, பயிற்சியின் குறிப்பிட்ட தேவைகளை நிறைவு செய்ய அகாடமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பயிற்சித் திட்டங்கள் தொடர்பான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக ஃபெடரல் சட்ட அமலாக்க பயிற்சி மையம், அமெரிக்கா, பங்களாதேஷ் காவல்துறை அகாடமி, மாலத்தீவு காவல்துறை சேவை மற்றும் உஸ்பெகிஸ்தான் குடியரசு போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் அகாடமி புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 206 பங்கேற்பாளர்கள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டனர்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு.நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2083239
***
IR/RJ/DL
(Release ID: 2083518)
Visitor Counter : 17