வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்கு பிராந்தியத்திற்கான பிரதமரின் மேம்பாட்டு முன்முயற்சியின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்கள்
प्रविष्टि तिथि:
11 DEC 2024 3:37PM by PIB Chennai
வடகிழக்கு பிராந்தியத்திற்கான பிரதமரின் மேம்பாட்டு முன்முயற்சி ஒரு புதிய மத்திய துறை திட்டமாக அறிவிக்கப்பட்டது. 2022-23 மத்திய பட்ஜெட்டில் 100% மத்திய நிதியுதவியுடன் ரூ.1500 கோடி ஆரம்ப ஒதுக்கீட்டில் அறிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை 2022-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி, 2022-23 நிதியாண்டு முதல் 2025-2026 நிதியாண்டு வரையிலான காலத்திற்கு மொத்தம் ரூ.6600 கோடி செலவில் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இத்திட்டத்தின் கீழ் 30.11.2024 வரை ரூ.4857.11 கோடி மதிப்பிலான 35 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
PKV/RJ/DL
(रिलीज़ आईडी: 2083512)
आगंतुक पटल : 70