அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைச் சட்டம்

Posted On: 11 DEC 2024 3:41PM by PIB Chennai

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF -ஏஎன்ஆர்எஃப்) என்பது, நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் இயற்றப்பட்ட அறக்கட்டளை அமைப்பாகும். அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை, ஆராய்ச்சி- மேம்பாட்டை (ஆர் அண்ட் டி) ஊக்குவித்தல், வளர்த்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது. இந்தியாவின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆய்வகங்கள் ஆகியவற்றில் ஆராய்ச்சி - கண்டுபிடிப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த ஏஎன்ஆர்எஃப்.

நாட்டில் அறிவியல் ஆராய்ச்சியின் உயர்நிலை உத்தியை வழங்குவதற்கான உச்ச அமைப்பாக ஏஎன்ஆர்எஃப் செயல்படுகிறது. ஏஎன்ஆர்எஃப் சட்டத்தின் விதிகள் 2024 பிப்ரவரி 5 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மானியங்கள், கடன்கள் மூலம் மத்திய அரசிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை ஏஎன்ஆர்எஃப் கொண்டுள்ளது.  ஏஎன்ஆர்எஃப்-க்கு, 2024-25-ம் ஆண்டுக்கு ரூ. 2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் - தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

---

AD/PLM/KPG/DL


(Release ID: 2083495) Visitor Counter : 17


Read this release in: English , Urdu , Hindi