அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தேசிய குவாண்டம் இயக்கம்
Posted On:
11 DEC 2024 3:42PM by PIB Chennai
தேசிய குவாண்டம் இயக்கம் (NQM -என்க்யூஎம்) எட்டு ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படுகிறது.
இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் சில
சூப்பர் கண்டக்டிங், ஃபோட்டானிக் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தளங்களில் இடைநிலை அளவிலான குவாண்டம் கணினிகளை உருவாக்குதல்
செயற்கைக்கோள் அடிப்படையிலான பாதுகாப்பான குவாண்டம் தகவல்தொடர்பை இரண்டு தரை நிலையங்களுக்கு இடையே இந்தியாவிற்குள் 2000 கிலோமீட்டர் தூரத்திற்கு உருவாக்குதல்
பிற நாடுகளுடன் நீண்ட தூர பாதுகாப்பான குவாண்டம் தகவல்தொடர்புகளை உருவாக்குதல்.
தற்போதுள்ள ஆப்டிகல் ஃபைபரில் அலைநீள பிரிவு மல்டிபிளக்சிங்கைப் பயன்படுத்தி நம்பகமான முனைகளுடன் 2000 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமான இடங்களுக்கு இடையே குவாண்டம் விசை விநியோகத்தை உருவாக்குதல்.
ஒவ்வொரு முனையிலும் (2-3 முனைகள்) ஒத்திசைக்கப்பட்ட குவாண்டம் ரிப்பீட்டர்களுடன் பல முனை குவாண்டம் கட்டமைப்பை உருவாக்குதல்
குவாண்டம் கம்ப்யூட்டிங், குவாண்டம் கம்யூனிகேஷன், குவாண்டம் சென்சிங், குவாண்டம் மெட்டீரியல்ஸ் ஆகியவை இந்த இயக்கத்தின் கீழ் கவனம் செலுத்தப்படும் முக்கிய பகுதிகளாகும்.
6003.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு ஆண்டு காலத்திற்கு தேசிய குவாண்டம் இயக்கத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் - தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இத்தகவலைத் தெரிவித்தார்.
****
AD/PLM/KPG/DL
(Release ID: 2083492)
Visitor Counter : 34