அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பிரதமரின் ஆராய்ச்சி மானிய உதவித் திட்டம்

Posted On: 11 DEC 2024 3:43PM by PIB Chennai

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ஏஎன்ஆர்எஃப்) பிரதமரின் தொடக்க நிலை தொழில்முறை ஆராய்ச்சி மானியத் (PMECRG-பிஎம்இசிஆர்ஜி) திட்டம், ஆரம்பகால தொழில்முறை ஆராய்ச்சியாளர்களுக்கு ஆராய்ச்சி சிறப்பை நோக்கமாகக் கொண்டு அவர்களுக்கு அதிகாரம் அளித்து ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டமாகும்.

இது எளிதாகவும் நெகிழ்வுத்தன்மையுடனும் ஆராய்ச்சியை திறம்பட நடத்துவதற்கான சூழலை அவர்களுக்கு வழங்குகிறது. மூன்று வருட காலத்திற்கு ரூ.60 லட்சம் வரை ஆதரவுடன் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியை மேற்கொள்ள இது உதவுகிறது. துறைவாரியான வல்லுநர் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆராய்ச்சி முன்மொழிவின் தரம், விண்ணப்பதாரரின் ஆராய்ச்சி சாதனை, சம்பந்தப்பட்ட துறைகளில் அவர்களின் சாதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுக் குழுக்கள் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.

ஏஎன்ஆர்எஃப்-ன் உயர் முன்னுரிமைப் பகுதிகளில் மின்சார வாகனங்கள் தொடர்பான தீர்வை மையமாகக் கொண்ட ஆராய்ச்சிகள் இடம்பெறுகின்றன.

பிஎம்இசிஆர்ஜி திட்டம், அறிவியல் ஆராய்ச்சியை முன்னேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும். உதவி பெறுபவர்கள், சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இது உதவும்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் - தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

-----

AD/PLM/KPG/DL


(Release ID: 2083485) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi