பாதுகாப்பு அமைச்சகம்
பேரிடர் மேலாண்மையில் ஆராய்ச்சியை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் - தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் கூட்டு போர் ஆய்வு மையம் கையெழுத்து
Posted On:
11 DEC 2024 3:43PM by PIB Chennai
நாட்டின் பேரிடர் மேலாண்மைத் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் தலைமையகத்தின் கீழ் உள்ள முப்படை சிந்தனைக் குழுவான கூட்டு போர் ஆய்வு மையம் (CENJOWS), தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் (NDMA) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் (ஓய்வு), சென்ஜோவ்ஸ் தலைமை இயக்குநர் அசோக் குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
பேரிடர் தணிப்பு, தயார்நிலை உள்ளிட்டவற்றில் முக்கியமான சவால்களை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பை அதிகரிக்க இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட்டு ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சர்வதேச ஈடுபாடுகள் ஆகியவற்றை நோக்கமாக கொண்டதாகும்.
நிகழ்ச்சியில் பேசிய அசோக் குமார், தேசிய, சர்வதேச நிலைகளில் பேரிடர் தாங்கும் திறனை மேம்படுத்தும் செயல் கொள்கை பரிந்துரைகளை உருவாக்க கூட்டு ஆராய்ச்சியை மேம்படுத்துவது அவசியம் என்று வலியுறுத்தினார்.
----
TS/PLM/KPG/DL
(Release ID: 2083479)
Visitor Counter : 19