பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மகளிர் உதவி எண் மூலம் 31.10.2024 வரை 81.64 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு உதவி
प्रविष्टि तिथि:
11 DEC 2024 4:43PM by PIB Chennai
மகளிர் உதவி எண் திட்டம் 2015 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மகளிர் 181 என்ற தொலைபேசி எண் மூலம் காவல்துறை, மருத்துவமனைகள், சட்ட சேவை மையங்கள் போன்ற உரிய முகமைகளுடன் தொடர்பு கொள்ளலாம். பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் இருந்து பெண்கள் இந்த எண்ணுக்கு க்கு தொடர்பு கொள்ளலாம். 24x7x365 அவசரகால மற்றும் அவசரமற்ற காலங்களில் உதவிடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது பெண்கள் நலத் திட்டங்கள் மற்றும் திட்டங்கள் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது. தற்போது, மகளிர் உதவி எண் 35 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் செயல்படுகிறது. (மேற்கு வங்க அரசு மகளிர் உதவி எண் சேவையை செயல்படுத்தவில்லை) இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 31.10.2024 வரை 81.64 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உதவி பெற்றுள்ளனர்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2083274
***
TS/IR/RJ/DL
(रिलीज़ आईडी: 2083403)
आगंतुक पटल : 77