சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி:மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார மற்றும் ஆயுள் காப்பீடு
Posted On:
11 DEC 2024 12:59PM by PIB Chennai
ஆட்டிசம், மூளை முடக்குவாதம், அறிவுத்திறன் குறைபாடு போன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ளவர்களுக்கான நிராமயா சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை தேசிய அறக்கட்டளை செயல்படுத்துகிறது.
நிராமயா மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கான நிதி ஒதுக்கீடு, அதன் பயன்பாடு பின்வருமாறு:
வ.எண்.
|
ஆண்டு
|
ஒதுக்கப்பட்ட நிதி (கோடியில்)
|
பயன்படுத்தப்பட்ட நிதிகள்
(கோடியில்)
|
|
2021-22
|
11.38
|
11.38
|
2
|
2022-23
|
18.14
|
18.14
|
3
|
2023-24
|
13.87
|
13.87
|
நடப்பாண்டில், அதாவது 2024-25-ம் ஆண்டில், இன்று வரை 47,307 பயனாளிகள் நிராமயா மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் சுகாதார திட்டம் என்பது மத்திய அரசின் முன்னோடி திட்டமாகும். இத்திட்டம் சுமார் 55 கோடி பயனாளிகளுக்கு இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவதற்காக ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான சுகாதார காப்பீட்டை வழங்குகிறது. இத்திட்டத்தில் 12.37 கோடி குடும்பங்கள் இணைந்துள்ளன. இது நாட்டில் உள்ள 40%-க்கும் அதிகமான பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும்.
இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளை சேர்ப்பது தொடர்பாக, சமூக-பொருளாதார சாதி கணக்கெடுப்பின் மூலம் அடையாளம் காணப்பட்ட ஏழை குடும்பங்கள் அடங்கும்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பி.எல். வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2083103)
TS/SV/KPG/KR
(Release ID: 2083182)
Visitor Counter : 30