உள்துறை அமைச்சகம்
இடதுசாரி தீவிரவாத வன்முறை குறைந்தது
Posted On:
10 DEC 2024 4:29PM by PIB Chennai
'இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தை' மத்திய, மாநில அரசுகள் உறுதியாக அமல்படுத்தியதன் விளைவாக இடதுசாரி தீவிரவாதம் புவியியல் பரவல் மற்றும் வன்முறை ஆகிய இரண்டிலும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைகள் 2010-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டில் 73% குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் இதன் விளைவாக ஏற்படும் இறப்புகளும் (பொதுமக்கள் + பாதுகாப்புப் படையினர்) 86% குறைந்துள்ளன. நடப்பாண்டில் (15.11.2024 வரை), 2023-ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இடதுசாரி தீவிரவாதத்தால் நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்களில் மேலும் 25% குறைந்துள்ளது.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடந்த ஆறு ஆண்டுகளில் மூன்று முறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 2018 ஏப்ரலில் 126 மாவட்டங்களிலிருந்து 90 மாவட்டங்களாகவும், 2021 ஜூலையில் 70 ஆகவும், பின்னர் 2024 ஏப்ரலில் 38 ஆகவும் குறைந்தது.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கத்திற்காக இதுவரை 14,469 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்த, 6567 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளூர் மக்களின் நிதி வசதியை மேம்படுத்த 5731 அஞ்சலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 30 மாவட்டங்களில் 1007 வங்கிக் கிளைகளும், 937 தானியங்கி பணம் வழங்கும் மையங்களும் திறக்கப்பட்டுள்ளன.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 46 தொழிற்பயிற்சி நிலையங்களும், 49 திறன் மேம்பாட்டு மையங்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பழங்குடியினருக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 178 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
***
TS/IR/AG/DL
(Release ID: 2082948)
Visitor Counter : 12