உள்துறை அமைச்சகம்
பேரிடர் தயார்நிலை மற்றும் பருவநிலை மீட்சி
Posted On:
10 DEC 2024 4:30PM by PIB Chennai
பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005, பேரிடர்களை திறம்பட நிர்வகிப்பதற்கான சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பை வழங்குகிறது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் 2016-ம் ஆண்டில் தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தை தயாரித்துள்ளது, அது 2019-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு திருத்தப்பட்டது. பேரிடர் மேலாண்மை சுழற்சியின் அனைத்து கட்டங்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கு ஒரு கட்டமைப்பையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறது. இது நாட்டின் பேரிடர் நெகிழ்திறன் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு உத்திசார்ந்த கருவியாகும்.
2015-க்குப் பிந்தைய மூன்று முக்கிய உலகளாவிய கட்டமைப்புகளான பேரிடர் அபாயக் குறைப்புக்கான கட்டமைப்பு, நீடித்த வளர்ச்சி இலக்குகள் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தம் மற்றும் பிரதமரின் 10 அம்ச செயல்திட்டம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பேரிடர் அபாயக் குறைப்பு களத்தில் தேசிய உறுதிப்பாடுகளை ஒருங்கிணைக்கிறது.
தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டம் மத்திய மற்றும் மாநில அளவில் உள்ள அனைத்து துறைகள், அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மற்றும் மாவட்ட அளவிலான செயல்பாட்டாளர்களை ஒன்றிணைத்து, பேரிடர் அபாய குறைப்பில் அவர்களின் பங்கு மற்றும் பொறுப்புகளை வரையறுக்கிறது.
மேலும், தேசிய பேரிடர் மேலாண்மைக் கொள்கை 2005-ம் ஆண்டின் பேரிடர் மேலாண்மைச் சட்டத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு 2009-ம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கேரள மாநிலம் உட்பட 15 மாநிலங்களில் நிலச்சரிவு அபாய தணிப்பு நடவடிக்கைகள் / திட்டங்களை செயல்படுத்துவதை உள்ளடக்கிய ரூ.1000 கோடி மதிப்பிலான தேசிய நிலச்சரிவு அபாய தணிப்பு திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கேரளாவில் வயநாடு உள்ளிட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு தணிப்பு நடவடிக்கைகளுக்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டத்தின்படி மாநில அரசு தனது திட்டங்களை வழங்கலாம்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
***
TS/IR/AG/DL
(Release ID: 2082946)
Visitor Counter : 18