கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்சார வாகனங்களுக்கு மானியம்

प्रविष्टि तिथि: 10 DEC 2024 4:32PM by PIB Chennai

  மின்சார வாகனங்களுக்கு நேரடி மானியம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படுவதில்லை. இருப்பினும், மின்சார வாகனங்களின் நுகர்வோருக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் ஊக்கமளிக்கப்படுகிறது.  பஞ்சாப் மாநிலம் உட்பட பான் இந்தியா அடிப்படையில் மின்சார வாகனங்களை பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் பின்வரும் திட்டங்களை வகுத்துள்ளது:

இந்தியாவில் மின்சார வாகனங்களை விரைவாக ஏற்றுக்கொள்வது மற்றும் உற்பத்தி செய்தல் (ஃபேம் இந்தியா) திட்டம் கட்டம்-II:ஏப்ரல் 1, 2019 முதல் ஐந்து ஆண்டு காலத்திற்கு ரூ .11,500 கோடி மொத்த பட்ஜெட் ஆதரவுடன் இந்த திட்டத்தை அரசு செயல்படுத்தியது. இந்த திட்டம் மின்சார இருசக்கர வாகனங்கள்,மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், மின்சார பேருந்துகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான பொது மின்னேற்றி நிலையங்களை ஊக்குவித்தது.

இந்தியாவில் வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரிபாகத் தொழிலுக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம்: மேம்பட்ட தானியங்கி தொழில்நுட்ப  தயாரிப்புகளுக்கான நாட்டின் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதற்காக இந்தியாவில் வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரிபாகத் தொழிலுக்கு ரூ. 25,938 கோடி பட்ஜெட் செலவில் இந்த திட்டத்திற்கு அரசு 2021 செப்டம்பர்  23 அன்று ஒப்புதல் அளித்தது.

புதுமையான வாகன மேம்பாட்டில் பிரதமரின் எலக்ட்ரிக் டிரைவ் புரட்சி திட்டம்: இந்தத் திட்டம் ₹10,900 கோடி செலவில் 2024 செப்டம்பர் 29 அன்று அறிவிக்கப்பட்டது. மின்சார இருசக்கர வாகனங்கள்,மூன்று சக்கர வாகனங்கள், மின்சார லாரிகள், மின்சார-பேருந்துகள், மின்சார -அவசர ஊர்திகள், மின்சார வாகனங்களுக்கான பொது மின்னேற்றி நிலையங்கள் மற்றும் சோதனை முகமைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட மின்சார வாகனங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட இரண்டு ஆண்டு திட்டமாகும்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கனரக தொழில்கள் மற்றும் எஃகுத் துறை இணையமைச்சர் திரு பூபதிராஜு சீனிவாச வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

 

TS/IR/AG/DL


(रिलीज़ आईडी: 2082932) आगंतुक पटल : 76
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी