சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உண்டு உறைவிடக் கல்வித் திட்டம்

Posted On: 10 DEC 2024 4:07PM by PIB Chennai

குறிப்பிட்ட பகுதிகளில் மாணவர்களின் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான உண்டு உறைவிடக் கல்வித் திட்டம் இரண்டு வகைகளில் செயல்படுத்தப்படுகிறது:

முதலாவது ஆண்டு தோறும் 3,000 திறன் வாய்ந்த  ஷெட்யூல்டு பழங்குடியின வகுப்பைச்“ சேர்ந்த மாணவர்கள் மத்திய இடைநிலை  கல்வி வாரியம் அல்லது மாநில கல்வி வாரியங்களால் இணைக்கப்பட்ட உண்டு உறைவிடப் பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தேர்வு முகமை  நடத்தும் நுழைவுத் தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 12-ம் வகுப்பு வரை அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

இரண்டாவதாக ஆதிதிராவிட மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகள், தொடக்க, இடைநிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் பயன்முறை – முதல் வகையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிதிராவிட மாணவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

வ. எண்

ஆண்டுகள்

தேர்வு செய்யப்பட்ட எஸ்.சி., மாணவர்கள்

1

2022-23

1,468

2

2023-24

2,543

3

2024-25

2,961

மொத்தம்

6,972

 

மத்திய அரசின் திட்டம் என்பதால், 2021-22 முதல் 2023-24-ம் ஆண்டு வரை மாநில வாரியாக நிதி ஒதுக்கீட்டிற்கான தரவுகள் மற்றும் நிதி விடுவிப்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

(ரூ. கோடியில்)

வ. எண்

ஆண்டுகள்

திருத்திய மதிப்பீடு

செலவு

1

2021-22

63.21

38.04

2

2022-23

89.00

51.12

3

2023-24

90.65

81.57

மொத்தம்

242.86

170.73

 

இத்திட்டத்தின் இரண்டு முறைகளின் கீழ் உள்ள மொத்த உண்டு உறைவிடப் பள்ளிகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

முறை-1

246

முறை-2

51

மொத்தம்

297

 

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

*****


TS/SV/KPG/DL


(Release ID: 2082924) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi