சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி: மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள்
Posted On:
10 DEC 2024 4:08PM by PIB Chennai
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மூத்த குடிமக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிரதமரின் மூத்த குடிமக்கள் ஓய்வூதிய காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துகிறது.
ஒருங்கிணைந்த மூத்த குடிமக்கள் திட்டமானது முதியோர் இல்லங்கள், தொடர் பராமரிப்பு இல்லங்கள் போன்றவற்றை நடத்துவதற்கும் பராமரிப்பதற்கும் அரசு சாரா / தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மானிய உதவி வழங்குகிறது. ஏழ்மை நிலையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உறைவிடம், ஊட்டச்சத்து, மருத்துவ சேவை மற்றும் பொழுதுபோக்கு போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன.
தேசிய மூத்த குடிமக்கள் திட்டம் -சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மாத வருமானம் ரூ.15,000/-க்கு மிகாமல் உள்ள மூத்த குடிமக்களுக்கு, வயதாவது தொடர்பான குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கு, அவர்களின் உடல் செயல்பாடுகளை கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு கொண்டு வரக்கூடிய உடல் இயக்க உதவி சாதனங்கள் மற்றும் வாழ்க்கை உதவி சாதனங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ராஷ்டிரிய வயோஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம், 'செயற்கை உறுப்புகள் உற்பத்தி நிறுவனம் (அலிம்கோ)' என்ற மத்திய பொதுத்துறை நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
முதியோரின் பல்வேறு உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2010-11-ம் ஆண்டில் முதியோர் சுகாதாரத்திற்கான தேசிய திட்டத்தை தொடங்கியது. 'சர்வதேச முதியோர் தினத்தை' குறிக்கும் வகையில், 2024 அக்டோபரில், மொத்தம் 44279 சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டு, 9,15,100 முதியவர்களுக்கு சுகாதார சேவைகள் வழங்கப்பட்டன. மேலும், நாடு முழுவதும் 3904 முதியோர் இல்லங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 33049 முதியோருக்கு சுகாதார சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பி.எல். வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/IR/AG/DL
(Release ID: 2082848)
Visitor Counter : 35