மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் திரு ஜிதின் பிரசாதா, இந்திய இணைய நிர்வாக மன்றத்தின் 4-வது கூட்டத்தை துவக்கி வைத்தார்.
Posted On:
09 DEC 2024 6:27PM by PIB Chennai
தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய இணைய நிர்வாக மன்றத்தின் 4-வது கூட்டத்தை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு ஜிதின் பிரசாதா தொடங்கி வைத்தார். உரையாடல் மற்றும் செயல்பாட்டிற்கான ஒரு துடிப்பான தளமான இந்த நிகழ்வு, கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தை ஒன்றிணைத்து இணைய நிர்வாகத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கருப்பொருள், "இந்தியாவிற்கான இணைய நிர்வாகத்தை புதுமைப்படுத்துதல்", நிலையான, உள்ளடக்கிய மற்றும் சமமான வளர்ச்சிக்கு இணையத்தை மேம்படுத்துவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
அப்போது பேசிய அமைச்சர், இந்த மன்றம் விவாதத்திற்கான ஒரு தளம் மட்டுமல்ல, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வலுவான அழைப்பும் கூட என்று அவர் குறிப்பிட்டார். சமத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மதிப்புகளை பிரதிபலிக்கும் டிஜிட்டல் கொள்கைகளை வடிவமைக்க கூட்டு முயற்சிகளின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
டிஜிட்டல் மாற்றத்தில் நாட்டின் விரைவான முன்னேற்றத்தை எடுத்துரைத்த திரு. பிரசாதா, இந்தியா உலகிற்கான முன்மாதிரியாக விளங்குகிறது என்று குறிப்பிட்டதோடு டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் முக்கிய சாதனைகள் குறித்தும் பேசினார். "யுபிஐ, ஆதார் மற்றும் பாரத் நெட் திட்டம் போன்ற வெற்றிகளால் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மாற்றத்திற்கான பயணம், மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக செயல்படுகிறது" என்று அவர் குறிப்பிட்டார். 1.4 பில்லியனுக்கும் அதிகமான குடிமக்கள் மற்றும் சுமார் 1 பில்லியன் இணைய பயனர்களுடன், இந்தியா ஒரு துடிப்பான டிஜிட்டல் பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது, புதுமை மற்றும் உள்ளடக்கத்தில் உலகளாவிய வரையறைகளை அமைத்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
அரசின் முன்முயற்சிகள் டிஜிட்டல் இடைவெளியை எவ்வாறு குறைத்து, கிராமப்புற சமூகங்களுக்கு தொழில்நுட்பத்தை கொண்டு வந்துள்ளன மற்றும் அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்பதையும் அவர் வலியுறுத்தினார். "தற்போது, நமது 95% கிராமங்கள் 3ஜி, 4ஜி இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார். மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2082415
***
TS/IR/RJ/DL
(Release ID: 2082500)
Visitor Counter : 24