அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
திட நிலையில் "முறுக்கு அடுக்குகள்": உதிரி வெப்பத்தை மின்சாரமாக மாற்றுவதில் ஒரு திருப்புமுனை
Posted On:
09 DEC 2024 5:22PM by PIB Chennai
ஃபெரிகிரிஸ்டல்களில் முறுக்கப்பட்ட அடுக்குகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் உதிரி வெப்பத்தை எரிசக்தியாக மாற்றும் திறனைக் கொண்ட ஒரு புதிய பொருளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது வெப்பமின் ஆற்றல் மாற்றத்திற்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்டுள்ளது. ரசாயனம், வெப்பம், எஃகு ஆலைகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற தொழில்துறை செயல்முறைகளின் மூலங்களிலிருந்து உதிரி வெப்பத்தைக் கைப்பற்றி மின்சாரமாக மாற்றும் ஒரு செயல்முறையாகும்.
பேராசிரியர் கனிஷ்கா பிஸ்வாசும் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் ஒரு தன்னாட்சி நிறுவனமாக உள்ள பெங்களூரு ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் புதிய வேதியியல் பிரிவைச் சேர்ந்த அவரது பி.எச்.டி மாணவி செல்வி.வைஷாலி தனேஜாவும் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் ஆற்றல் செயல்திறனில் கணிசமான முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும். அதிக நிலைத்தன்மைக்கு பங்களிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2082370
***
TS/ SMB/ RJ/ DL
(Release ID: 2082463)
Visitor Counter : 29