பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய ஏரோஸ்பேஸ் மருத்துவ சொசைட்டியின் 63-வது ஆண்டு மாநாடு
Posted On:
07 DEC 2024 3:38PM by PIB Chennai
இந்தியன் சொசைட்டி ஆஃப் ஏரோஸ்பேஸ் மெடிசின் இன்ஸ்டிடியூட் (ஐஎஸ்ஏஎம்) 63வது ஆண்டு மாநாடு 2024 டிசம்பர் 05 முதல் 07 வரை பெங்களூருவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோஸ்பேஸ் மெடிசின் (ஐஏஎம்) வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை துணைத் தலைவர் ஏர் மார்ஷல் எஸ்பி தர்கர் தொடங்கி வைத்தார்.
பாதுகாப்புப் படைகளில் தற்சார்பை அடைவதில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை நிகழ்ச்சியில் பேசிய அவர் வலியுறுத்தினார். வான்வெளி மருத்துவத்தில் இளம் கல்வி சாதனையாளர்களை அவர் பாராட்டினார். இந்திய விமானப்படையின் மருத்துவ சேவைகளின் பல்வேறு கூட்டு சாதனைகளை எடுத்துரைத்து, ஏர் மார்ஷல் ராஜேஷ் வைத்யா தலைமை உரையை நிகழ்த்தினார்.
முதல் இந்திய விமானப் படைத் தலைவரின் நினைவாக நிறுவப்பட்ட மதிப்புமிக்க ஏர் மார்ஷல் சுப்ரோதோ முகர்ஜி நினைவு உரையை, ஐஐடி மெட்ராஸின் விண்வெளிப் பொறியியல் துறையின் பயிற்சிப் பேராசிரியரும், இஸ்ரோ முன்னாள் இயக்குநருமான டாக்டர் லலிதாம்பிகா வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2081922
***
PKV /DL
(Release ID: 2081957)
Visitor Counter : 44