சுரங்கங்கள் அமைச்சகம்
தாமிர தரக்கட்டுப்பாட்டு ஆணை: தற்சார்பை நோக்கிய ஒரு படி
Posted On:
06 DEC 2024 5:28PM by PIB Chennai
நாட்டில் இரும்பு அல்லாத உலோகத் துறைக்கான (தாமிரம் உட்பட) தரக் கட்டுப்பாட்டு சூழல் அமைப்பை வலுப்படுத்த, சுரங்க அமைச்சகம் 2023 ஆகஸ்ட் 31 அன்று அலுமினியம், அலுமினிய உலோகக் கலவைகள் மற்றும் நிக்கலுக்கான தரக் கட்டுப்பாட்டு ஆணைகளுடன் தாமிர (தரக் கட்டுப்பாடு) ஆணையை அறிவித்தது.
தொழில்துறை பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும், விநியோக நிலைமையைக் கருத்தில் கொண்டும், இந்த உத்தரவு 3நவம்பர்2023 தேதியிட்ட அறிவிக்கையின் மூலம் ஆறு மாதங்களுக்கு (அதாவது 1.6.2024) நீட்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 3மே, 2024 தேதியிட்ட அறிவிக்கையின் மூலம் மேலும் ஆறு மாதங்களுக்கு அதாவது 1.12.2024 நீட்டிக்கப்பட்டது. அக்டோபர் 2023 மாதத்தில் தொழில்துறை அமைப்புகள் மற்றும் பயனீட்டாளர் துறை தொழில்களுடன் தொடர்ச்சியான கூட்டங்கள் மூலம் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் அமைச்சகம் வழக்கமான அடிப்படையில் பல கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.
2023-24 நிதியாண்டில், இந்தியா ரூ.24,552 கோடி மதிப்புள்ள சுமார் 363 ஆயிரம் டன் சுத்திகரிக்கப்பட்ட செப்பு கேத்தோடை (HS குறியீடு: 740311) இறக்குமதி செய்தது. சுத்திகரிக்கப்பட்ட தாமிர இறக்குமதியில் ஜப்பான் சுமார் 67% பங்களிக்கிறது. அளவு அடிப்படையில், இந்தியாவின் சுத்திகரிக்கப்பட்ட தாமிர இறக்குமதியில் சுமார் 69% ஜப்பானில் இருந்து வருகிறது. தான்சானியா இந்தியாவின் இரண்டாவது முக்கிய சுத்திகரிக்கப்பட்ட தாமிர ஆதாரமாகும், இது இறக்குமதியில் சுமார் 18% பங்களிக்கிறது; அதைத் தொடர்ந்து மொசாம்பிக் சுமார் 5% பங்கைக் கொண்டுள்ளது.
இதுவரை, ஜப்பானிய உருக்காலைகளிடமிருந்து பிஐஎஸ் சான்றிதழுக்காக 7 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன, அவற்றில் ஒரு உருக்காலைக்கு (சுமிடோமோ மெட்டல் மைனிங் கம்பெனி லிமிடெட்) ஏற்கனவே உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
***
TS/PKV/DL
(Release ID: 2081878)