அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இயற்கை உணவு ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
06 DEC 2024 4:30PM by PIB Chennai
இயற்கை உணவு உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் நடைபெற்ற "எகனாமிக் டைம்ஸ் ஊட்டச்சத்து மாநாடு 2024" என்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்த அரசு உறுதியுடன் செயல்படுவதாக கூறினார். இந்தியாவின் ஊட்டச்சத்து சவால்களை எதிர்கொள்ள பன்முக அணுகுமுறை தேவை என்று அவர் கூறினார்.
இந்தியாவில் சிக்கலான உணவுக் கலாச்சாரம் உள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் குறிப்பிட்ட பகுதியைப் பொறுத்து, உணவு முறைகளை வரையறுக்க முடியும் என்று அவர் கூறினார். இப்போது பல்வேறு பகுதிகளின் உணவுகள் நாட்டின் பிற பகுதிகளிலும் பிரபலமடைந்து வருவதாக அவர் தெரிவித்தார். நமது சமூகமும், நாடும் பல்வேறு நிலைகளில் பரிணாம வளர்ச்சியடைந்து வருவதைப் போலவே நமது உணவுக் கலாச்சாரமும் வளர்ந்து வருகிறது என்று அமைச்சர் கூறினார்.
புதுமை, ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் ஊட்டச்சத்து புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் ஒவ்வொரு இந்தியருக்கும் ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2081876)
Visitor Counter : 20