வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் 16.6 லட்சத்துக்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன
Posted On:
06 DEC 2024 5:07PM by PIB Chennai
ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சியின் கீழ், புத்தொழில் சூழல் சார் அமைப்பின் வளர்ச்சிக்கும், அதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையால் (டிபிஐஐடி) புத்தொழில் நிறுவனங்களாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் 55க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில்களில் 16.6 லட்சத்துக்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதித் திட்டம் (FFS), ஸ்டார்ட்அப் இந்தியா ஆரம்ப நிதிஉதவித் திட்டம் (SISFS), புத்தொழில்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் (CGSS) போன்ற முதன்மைத் திட்டங்கள் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கின்றன. புத்தொழில் சூழல் அமைப்பின் முழுமையான வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மாநிலங்களின் தரவரிசை வெளியீடு, தேசிய புத்தொழில் விருதுகள் உள்ளிட்ட முன் முயற்சிகளையும் அரசு செயல்படுத்துகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2081838)
Visitor Counter : 25