சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அட்டவணை இனத்தினர் மற்றும் பழங்குடியின மக்களின் தாய்-சேய் நலத்துக்கான அரசின் நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
06 DEC 2024 4:03PM by PIB Chennai
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ஷெட்யூல்டு மற்றும் பழங்குடியின மக்களுக்கு தாய்-சேய் சுகாதார வசதிகள் கிடைப்பதை மேம்படுத்தும் வகையில் அனைத்து கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பின்வருமாறு:
கர்ப்பிணி பெண்கள் சுகாதாரத் திட்டம் என்பது பிரசவங்கள் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் சில நிபந்தனைகளுடன் கூடிய பணப் பரிமாற்றத் திட்டமாகும்.
பச்சிளங் குழந்தை சுகாதாரத் திட்டம் என்பது பொது சுகாதார நிறுவனங்களில் பிரசவிக்கும் அனைத்து கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு (ஒரு வயது வரை) அறுவை சிகிச்சை உட்பட அனைத்து சிகிச்சைகளும் கட்டணமில்லாமல் கிடைப்பதை உறுதி செய்கிறது. இலவச மருந்துகள், நுகர்பொருட்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் காலங்களில் உணவு, பரிசோதனை, போக்குவரத்து, தேவைப்பட்டால் இரத்தம் ஏற்றுதல் ஆகிய கட்டணமில்லா சேவைகளும் இதில் அடங்கும். ஒரு வயது வரை நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கும் இதே போன்ற வசதிகள் நடைமுறையில் உள்ளன.
தாய் - சேய் நல சேவைகளை வழங்க ஏதுவாக, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன், ஒருங்கிணைந்து ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிராமப்புறங்களில் துப்புரவு மற்றும் ஊட்டச்சத்து தினங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2081484
----
TS/SV/KPG/KR/DL
(रिलीज़ आईडी: 2081746)
आगंतुक पटल : 101