சுற்றுலா அமைச்சகம்
கிருஷ்ணவேணி சங்கீத நீராஜனம் இசை விழா விஜயவாடாவில் தொடங்கியது
Posted On:
06 DEC 2024 5:58PM by PIB Chennai
கிருஷ்ணவேணி சங்கீத நீராஜனம் இசை விழாவின் இரண்டாவது பதிப்பு விஜயவாடாவில் உள்ள தும்மலபள்ளி க்ஷேத்ரய கலாக்ஷேத்ரா ஆடிட்டோரியத்தில் இன்று தொடங்கியது. இந்த பிரமாண்டமான நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் திரு சுரேஷ் கோபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆந்திரப் பிரதேச அரசின் சுற்றுலா, கலாச்சார அமைச்சர் திரு கந்துலா துர்கேஷ், ஆந்திரப் பிரதேச மாநில கலாச்சார ஆணையத்தின் தலைவர் திருமதி பி.தேஜஸ்வி, ஆந்திரப் பிரதேச நாடக அகாடமியின் தலைவர் திரு கும்மாடி கோபால் கிருஷ்ணா, ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறை செயலாளர் திரு வினய் சந்த் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
விஜயவாடாவில் உள்ள மூன்று முக்கிய இடங்களில் மூன்று நாள் இந்த திருவிழா நடைபெறுகிறது. இதில் 140-க்கும் மேற்பட்ட திறமையான கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதில் 35 நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர், திரு சுரேஷ் கோபி தெலுங்கு பாரம்பரியத்தின் வளமான கலாச்சார, இசை பாரம்பரியத்தை கௌரவிப்பதற்கான ஒரு தளமாக இது அமைந்துள்ளது என்றார். தியாகராஜர், அன்னமாச்சார்யா, ராமதாசர் போன்றவர்களின் பங்களிப்புகளை அவர் எடுத்துரைத்தார்.
கர்நாடக இசையின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதில் குரு-சிஷ்ய பரம்பரையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு சுரேஷ் கோபி, இதேபோன்ற விழாக்களை மற்ற தென் மாநிலங்களுக்கும், குறிப்பாக கேரளாவுக்கு விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2081721)