புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இந்திய சூரியசக்தி ஆற்றல் கழகம், "புதுமையான தயாரிப்பு மேம்பாடு" க்கான 3 வது பொதுத்துறை நிறுவன உருமாற்ற விருதை வென்றது
Posted On:
06 DEC 2024 1:27PM by PIB Chennai
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சூரியசக்தி ஆற்றல் கழகம் (எஸ்.இ.சி.ஐ), "புதுமையான தயாரிப்பு மேம்பாடு" பிரிவின் கீழ் 3 வது பொதுத்துறை நிறுவன உருமாற்ற விருதை ‘தேவையின் அடிப்படையில் டிஸ்காம்களுக்கு உறுதியான மற்றும் அனுப்பக்கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வழங்கலுக்காக' பெற்றது. டிசம்பர் 05, 2024 அன்று புதுதில்லியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
எஸ்.இ.சி.ஐ.யின் பொது மேலாளர் (பெருநிறுவன திட்டமிடல்) திரு அஜய் குமார் சின்ஹா மற்றும் பிற அதிகாரிகள் முன்னிலையில் இந்த விருதை , இயக்குநர் (சூரியசக்தி) திரு சஞ்சய் ஷர்மா, இயக்குநர் (நிதி) திரு ஜோஷித் ரஞ்சன் சிகிதார் மற்றும் மின் அமைப்பின் இயக்குநர் திரு சிவகுமார் வி வேபகோமா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
எஸ்.இ.சி.ஐ, தேவையின் அடிப்படையில் டிஸ்காம்களுக்கு உறுதியான மற்றும் அனுப்பக்கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வழங்கல் மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பல டிஸ்காம்கள் மற்றும் மாநிலங்களுடன் இணைந்து அவர்களின் ஆற்றல் தேவைகளைப் புரிந்துகொள்வது, அவற்றின் புதுப்பிக்கத்தக்க மின் தேவையைப் பூர்த்தி செய்யும் மாதிரிகளை வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
*****
TS/BR/KV/KR/DL
(Release ID: 2081641)