சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
'நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்' தளத்தை சுமார் 6.5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்
Posted On:
06 DEC 2024 3:39PM by PIB Chennai
ஒரு குடியரசாக மலர்ந்த மற்றும் அரசியல் அமைப்பை இந்தியா ஏற்றுக் கொண்ட75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் 'நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்' என்ற தலைப்பில் நாடு தழுவிய பிரச்சாரத்தை நீதித்துறை செயல்படுத்தி வருகிறது. இந்த பிரச்சாரம் ஜனவரி 24, 2024 அன்று குடியரசுத் துணைத் தலைவரால் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரச்சாரத்தின் பரவலை உறுதி செய்வதற்காக மார்ச் 9, அன்று ராஜஸ்தானின் பிகானேரிலும், உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஜூலை 16, அன்றும், அசாமின் குவஹாத்தியில் நவம்பர் 19, அன்றும் மூன்று பிராந்திய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கொள்கைகளுக்கான நமது கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதும், நமது தேசத்தை பிணைக்கும் பகிரப்பட்ட மதிப்புகளைக் கொண்டாடுவதும் இந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும்.
2024 ஜூலை 16 அன்று பிரயாக்ராஜில் 2வது பிராந்திய நிகழ்வின் போது தொடங்கப்பட்ட 'நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்' இணையதளம்' (https://www.hamarasamvidhan.gov.in/), அரசியலமைப்பு மற்றும் அவர்களின் சட்ட உரிமைகள் பற்றிய பொது விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான அறிவுக் களஞ்சியமாக செயல்படுகிறது. கூடுதலாக, இந்தப் பிரச்சாரம் மைகவ் உடன் இணைந்து நடத்தப்பட்ட ஆன்லைன் போட்டிகள் மூலம் குறிப்பிடத்தக்க வகையில் பொதுமக்களின் ஈடுபாட்டை அதிகரித்துள்ளது. இது அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த புரிதலைப் பெற மக்களை ஊக்குவிக்கிறது.
இந்த இணையதளத்தில் உள்ள உள்ளடக்கங்களின் துல்லியம் மற்றும் வழக்கமான புதுப்பிப்புகளை உறுதி செய்வதற்காக, சட்டப் பள்ளிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் சட்ட வல்லுநர்கள் குழுவானது வெளியிடுவதற்கு முன்பு உள்ளடக்கங்களை மதிப்பாய்வு செய்து சரிபார்க்கின்றது. இணையதளத்தின் உள்ளடக்கத்தில் வழக்கமான புதுப்பிப்பு உறுதி செய்யப்படுகிறது, இதனால் இந்த தளம் பொருத்தமானதாக உள்ளது. மேலும் மக்களுக்கு தேவையான தகவல்களையும் வழங்குகிறது. இதுவரை 662589 நபர்கள் இந்த இணையதளத்தைப் பார்வையிட்டுள்ளனர். இருப்பினும், பார்வையாளர்களின் மாநில வாரியான தரவு அந்த தளத்தில் பராமரிக்கப்படுவதில்லை.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. அர்ஜுன் ராம் மேக்வால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PKV/RR/KR/DL
(Release ID: 2081615)
Visitor Counter : 21