அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
விண்வெளியில் குவாண்டம் சமிக்ஞை குறித்த இந்தியாவின் ஆராய்ச்சிக்கு இமயமலை சிகரங்கள் பொருத்தமானவை: ஆய்வுத் தகவல்
Posted On:
06 DEC 2024 3:26PM by PIB Chennai
இந்திய துணைக் கண்டத்திற்கான ஒரு முன்னோடி ஆய்வில், குவாண்டம் சமிக்ஞைகளை விண்வெளியில் ஒளிரச் செய்வதற்கான உகந்த இடங்களை விஞ்ஞானிகள் வரைபடமாக்கியுள்ளனர்.
குவாண்டம் விசை விநியோகம் உள்ளிட்ட செயற்கைக்கோள் அடிப்படையிலான குவாண்டம் தகவல்தொடர்புகள் உலகளாவிய குவாண்டம் தகவல்தொடர்புகளை நோக்கிய மிகவும் நம்பிக்கைக்குரிய அணுகுமுறைகளில் ஒன்றாகும். வளிமண்டலத்தின் வழியாக குவாண்டம் சமிக்ஞைகளை கடத்துவதற்கான நம்பகத்தன்மையை தீர்மானிக்க,குவாண்டம் தகவல்தொடர்புகளின் மேல்நோக்கிய மற்றும் கீழ்நோக்கிய வளிமண்டலத் தூண்டுதல் அவசியம். இதற்கு நடைமுறை சாத்தியமான இடங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும்.
ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இந்தியாவின் மிக அதிநவீன மூன்று ஆய்வக தளங்களில் தற்போதுள்ள மூலத் தரவுகளை பகுப்பாய்வு செய்தனர். மேலும் அழகிய லடாக்கில் மிக உயரத்தில் அமைந்துள்ள ஹன்லேவில் உள்ள இந்திய வானியல் ஆய்வகம் இந்தப் புரட்சிகர தொழில்நுட்பத்திற்கு முக்கியமானதாக இருப்பதைக் கண்டறிந்தனர்.
கனடா, ஐரோப்பா, சீனா போன்றவற்றில் இதேபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டாலும், இந்தியாவின் குறிப்பிடத்தக்க புவியியல் பன்முகத்தன்மை - இமயமலை முதல் கடலோர சமவெளிகள் வரை, பாலைவனங்கள் முதல் வெப்பமண்டல பகுதிகள் வரை - இந்த பகுப்பாய்வை மதிப்புமிக்கதாக மாற்றக்கூடும். செயற்கைக்கோள் அடிப்படையிலான குவாண்டம் தகவல்தொடர்புகளின் ஆழமான இடைநிலை தன்மையை பகுப்பாய்வு கணக்கில் எடுத்துக்கொள்கிறது. இது துல்லியமான தொலைநோக்கி செயல்பாடுகள் முதல் குவாண்டம் சிக்னல்களை சிதைக்கக்கூடிய சிக்கலான வளிமண்டல கொந்தளிப்பு வடிவங்கள் வரை அனைத்தையும் புரிந்துகொள்வதைப் பொறுத்ததாக உள்ளது.
இந்தப் பகுப்பாய்வு அடிப்படையில், ராமன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் இந்திய வானியல் ஆய்வகம் உள்ள ஹன்லே (சிக்னல் இழப்பு - 44 டி.பி),இந்தியாவில் ஒரு சாத்தியமான தரை நிலையத்தை நிறுவுவதற்கான தளங்களில் சிறந்தது என்று முடிவு செய்தனர். அடுத்த இரண்டு சிறந்த தளங்கள் மவுண்ட் அபு (சிக்னல் இழப்பு - 47 டிபி) மற்றும் நைனிடால் (சிக்னல் இழப்பு - 48 டிபி) ஆகும். அங்கு சில தவிர்க்க முடியாத சமிக்ஞை இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அவர்கள் கூறினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2081468
*****
TS/SMB/KV/DL
(Release ID: 2081593)
Visitor Counter : 30