பாதுகாப்பு அமைச்சகம்
விமான பரிசோதனையில் ஈடுபடும் விமானிகளுக்கான பயிற்சி நிறைவு விழா
Posted On:
06 DEC 2024 2:53PM by PIB Chennai
விமானப்படையின் பரிசோதனை விமானிகள் பயிற்சி நிறைவு விழாவானது விமானம் மற்றும் அமைப்புகள்பரிசோநனை நிலையத்தில் உள்ள விமானப்படை பரிசோதனை விமானிகள் பள்ளியில் 06-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை பராமரிப்பு அதிகாரி ஏர் மார்ஷல் விஜய் குமார் கார்க் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஐ.ஏ.எஃப்., டி.ஆர்.டி.ஓ., எச்.ஏ.எல்., சொசைட்டி ஆஃப் எக்ஸ்பரிமென்ட்டல் டெஸ்ட் பைலட்ஸ் (எஸ்.இ.டி.பி) மற்றும் சொசைட்டி ஆஃப் ஃப்ளைட் டெஸ்ட் இன்ஜினியர்ஸ் (எஸ்.எஃப்.டி.இ) ஆகியவற்றின் மூத்த பிரதிநிதிகளும் விழாவில் கலந்து கொண்டனர்.
விமானம் மற்றும் சிஸ்டம்ஸ் டெஸ்ட்டிங் நிறுவனத்தின் கீழ் நிறுவப்பட்ட விமானப்படை பரிசோதனை விமானிகள் பள்ளி, இந்த வகையில் தகைசார்ந்த சிறப்பு பயிற்சி மையமாக விளங்குகிறது. இது விமான சோதனையில் ஈடுபடும் விமானிகள் குழுவினருக்கு பயிற்சி அளிக்கும் நாட்டின் ஒரே நிறுவனமாகும். பல ஆண்டுகளாக மிகவும் திறமையாக சோதனை குழுவினருக்கு இந்த நிறுவனம் பயிற்சி அளித்துள்ளது. அவர்கள் இந்தியாவின் பாதுகாப்பு வானூர்தி திட்டங்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர், மதிப்புமிக்க ககன்யான் திட்டம் போன்ற விண்வெளி திட்டங்களிலும் உள்ளது. இவர்கள் பங்களிப்பு உள்ளது .நட்பு நாடுகளின் அதிகாரிகளுக்கும் இது பயிற்சி அளித்துள்ளது. மொத்தம் 46 விமான சோதனை படிப்புகள், 23 உற்பத்தி சோதனை விமானிகள் படிப்புகள் மற்றும் 4 ஆர்.பி.ஏ சோதனை படிப்புகள் தற்போதைய பாடநெறிக்கு முன்பே தேர்ச்சி பெற்றுள்ளன. உலகின் அங்கீகரிக்கப்பட்ட சில டெஸ்ட் பைலட் பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பணி சர்வதேச அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
விழாவில், ஏழு அதிகாரிகளுக்கு (ஆறு விமானப்படை மற்றும் ஒரு கடலோர காவல்படை) சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறந்து விளங்கிய மாணவ அலுவலர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.
***
TS/PKV/RR/KR/DL
(Release ID: 2081583)
Visitor Counter : 20