சுற்றுலா அமைச்சகம்
கடல் விமானம் / கப்பல் சுற்றுலா பயணம்/ சாகச சுற்றுலாவை ஊக்குவித்தல்
Posted On:
05 DEC 2024 4:43PM by PIB Chennai
சுற்றுலா அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகள் மூலம் சுற்றுலாத் துறையில் இந்தியாவை முழுமையான முறையில் மேம்படுத்தச் செய்கிறது. அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கப்பல் சுற்றுலா, சாகச சுற்றுலா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு சுற்றுலாக்களை மேம்படுத்துவதற்கான இயக்கங்களை தொடர்ந்து நடத்துகிறது.
உலகளவில் கப்பல் சுற்றுலாவுக்கான விருப்பமான இடமாக இந்தியாவை நிலைநிறுத்த, சுற்றுலா அமைச்சகம் கப்பல் சுற்றுலாவுக்கான தேசிய உத்தி ஒன்றை வகுத்துள்ளது.
ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம், 'சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக மத்திய முகமைகளுக்கு உதவி' ஆகிய திட்டங்களின் கீழ், மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசு முகமைகளுக்கு சுற்றுலா வளர்ச்சிக்காக சுற்றுலா அமைச்சகம் நிதி உதவி அளிக்கிறது.
நாட்டில் சாகச சுற்றுலாவை மேம்படுத்த உத்வேகம் அளிக்கும் வகையில், சாகச சுற்றுலாவுக்கான தேசிய உத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. சாகச இடங்களை மேம்படுத்துதல், சாகச சுற்றுலாவில் பாதுகாப்பை ஊக்குவித்தல், திறன் மேம்பாடு, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் இந்த உத்தி கவனம் செலுத்துகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
------
TS/PLM/KPG/DL
(Release ID: 2081298)
Visitor Counter : 17