அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி: அறிவியல் மேன்மையை தொகுப்பாக்கம்

Posted On: 05 DEC 2024 3:23PM by PIB Chennai

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள், நிறுவன மற்றும் மனித திறன் மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் விளைவாக அறிவியல் மேன்மையின் தொகுப்பாக்கம் பெரும்பாலும் ஏற்படுகிறது.

இந்த நீடித்த முதலீடு இந்தியாவின் அறிவியல் வெளியீட்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியீடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் ஒட்டுமொத்த செயல்திறனில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் பொறியியலில் வழங்கப்பட்ட பி.எச்டி-களின் எண்ணிக்கையில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. 2015 ஆம் ஆண்டில் 81வது இடத்தில் இருந்த உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் இந்தியா 2024-ல் 39-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வெளிப்புற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பெண்களின் பங்களிப்பும் இரட்டிப்பாகியுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிலப்பரப்பை மாற்றுவதற்கும் உயர்த்துவதற்கும் வடிவமைக்கப்பட்ட பல புதுமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகள் / முகமைகளால் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கட்டமைப்புகளை ஊக்குவிப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டது:

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2081060

 

***

TS/PKV/RR/DL


(Release ID: 2081227) Visitor Counter : 16


Read this release in: English , Urdu , Hindi