சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மஹா பரிநிர்வாண தினம்
प्रविष्टि तिथि:
05 DEC 2024 3:06PM by PIB Chennai
‘மனதைப் பண்படுத்துவதே மனித வாழ்வின் இறுதி நோக்கமாக இருக்க வேண்டும்’.
-டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
இந்திய அரசியலமைப்பின் சிற்பியான பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 6 ஆம் தேதி மகாபரிநிர்வாண தினம் அனுசரிக்கப்படுகிறது. மதிப்பிற்குரிய தலைவர், சிந்தனையாளர், சீர்திருத்தவாதியான டாக்டர் அம்பேத்கர், சமத்துவத்தை வென்றெடுப்பதற்கும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஒழிப்பதற்கும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கானவர்கள் இந்த நாளில் அவரது கருத்துக்களை நினைவு கூர்ந்து அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை ஏற்கிறார்கள்.
பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 69-வது நினைவு தினத்தைக் குறிக்கும் மகாபரிநிர்வாண தினம் 2024 டிசம்பர் 6 அன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேர்னா ஸ்தலில் மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பாக டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையால் அனுசரிக்கப்படுகிறது. குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர், பிரதமர் திரு நரேந்திர மோடி, இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தவுள்ளனர்.
மஹாபரிநிர்வாண தினத்தின் முக்கியத்துவம்:
பௌத்த நூல்களின்படி, புத்தரின் மரணம் மகாபரிநிர்வாணம் என்று கருதப்படுகிறது.
சமூக சீர்திருத்தவாதியான பாபாசாகேப் அம்பேத்கர் புத்தரின் சிந்தனைகள் தனக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தார். அம்பேத்கர் ஒரு பௌத்த குருவாகக் கருதப்பட்டார். ஏனெனில் தீண்டாமை என்னும் சமூகத் துன்பத்தை ஒழிப்பதில் பாபாசாகேப் பெற்ற செல்வாக்கு காரணமாக அவர் ஒரு பௌத்த குருவாகக் கருதப்பட்டார். அதனால்தான் அவரது நினைவு நாள் மகாபரிநிர்வாண தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
-------
TS/PLM/KPG/RR/DL
(रिलीज़ आईडी: 2081218)
आगंतुक पटल : 105