மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
ராஷ்ட்ரிய கோகுல் மிஷன், தேசிய கால்நடை இயக்கம்
प्रविष्टि तिथि:
04 DEC 2024 5:08PM by PIB Chennai
நாட்டில் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன், தேசிய கால்நடை இயக்கத்தின் செயல்பாடுகள் பின்வருமாறு:
ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் (RGM):உள்நாட்டின பசு, எருமையினங்களின் மேம்பாடு, பாதுகாப்பு, மாட்டினங்களின் மரபணு மேம்பாடு, பால் உற்பத்தி திறனை அதிகரிகத்தல் ஆகியவற்றுக்காக 2021-22 ஆம் ஆண்டு முதல் 2025-26 ஆம் ஆண்டு வரை 2400 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய கால்நடை இயக்கம் (NLM):2014-15 நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய கால்நடை இயக்கத்தின் திருத்தியமைக்கப்பட்ட திட்டம், வேலைவாய்ப்பை உருவாக்குதல், தொழில் முனைவோர் மேம்பாடு, கால்நடைகளுக்கான உற்பத்தித் திறனை அதிகரித்தல், அதன் மூலம் இறைச்சி, ஆட்டுப்பால், முட்டை, கம்பளி உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து செயல்படுத்தப்படுகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/DL
(रिलीज़ आईडी: 2080862)
आगंतुक पटल : 60