புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நான்காவது உலகளாவிய பவள நிறமாற்ற நிகழ்வு

Posted On: 04 DEC 2024 3:39PM by PIB Chennai

 

நாட்டில், நான்காவது உலகளாவிய பவளப்பாறை வெண்மை நிறமாகும் நிகழ்வு  அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் கட்ச் வளைகுடா போன்ற பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பவளப்பாறை சுற்றுச்சூழல் அமைப்புகளை நிர்வகிக்கவும் பாதுகாக்கவும் செயற்கைக்கோள் படங்கள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மத்திய அரசு பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது:

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின்  கீழ் உள்ள நீடித்த கடலோர மேலாண்மைக்கான தேசிய மையம், அந்தமான் & நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு தீவுகள் உட்பட இந்திய கடலோரத்தில் உள்ள பல்வேறு பவளப்பாறை தளங்களில் தரவு மிதவை மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களை நிறுவுவதன் அடிப்படையில், நீண்டகால பவளப்பாறை சுகாதார கண்காணிப்பு, மற்றும் கடல் அமிலமயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு, 2011 மற்றும் 2019 இன் படி, இந்தியாவின் 1439 சதுர கி.மீ பவளப்பாறைகள் வரைபடமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், தேசிய கடலோர இயக்கத்தின் கீழ் லட்சத்தீவின் பவளப்பாறைகளின் தற்போதைய அளவு மற்றும் நிலையைத் தீர்மானிக்க, லட்சத்தீவு தீவுகளின் பவள பல்லுயிர் பெருக்கத்தை வரைபடமாக்க என்.சி.எஸ்.சி.எம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் சி.சி.க்கு ஒரு திட்டத்தை சமர்ப்பித்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இத்தகவலை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080596

**

TS/IR/KPG/KV


(Release ID: 2080651) Visitor Counter : 54


Read this release in: English , Urdu , Hindi