அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஐஐஎஸ்எஃப் 2024: அறிவியல் அடிப்படையிலான எதிர்காலத்திற்கான அர்ப்பணிப்பு
Posted On:
04 DEC 2024 12:58PM by PIB Chennai
குவஹாத்தியில் நடைபெற்ற 10-வது இந்திய சர்வதேச அறிவியல் விழா (IISF) 2024 நவம்பர் 30 முதல் தொடங்கி டிசம்பர் 4 அன்று நிறைவடைந்தது. 4 நாட்கள் நடைபெற்ற இந்த மாபெரும் அறிவியல் விழாவில் 24 வெவ்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் 7000 பிரதிநிதிகளும் 45,000 மாணவர்களும் பங்கேற்றனர்.
அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், நிறுவனங்களிடையே சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது.
அணுசக்தி தொடர்பான அமர்வில் மருத்துவம், விவசாயம், கூட்டு உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளுக்கு இந்தியாவில் அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
***
TS/PLM/AG/KV
(Release ID: 2080602)
Visitor Counter : 51