எரிசக்தி அமைச்சகம்
நீர் வளத்தைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள்
Posted On:
02 DEC 2024 6:27PM by PIB Chennai
புனல் மின் உற்பத்தித் திறனைப் பயன்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
பெரும் நீர்மின் திட்டங்களை (25 மெகாவாட்டுக்கு மேற்பட்ட திறன்) புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களாக அறிவித்தல், நியமிக்கப்பட்ட நுகர்வோர்களால் நீர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நுகர்வு கடப்பாடு, நீர்மின் கட்டணத்தை குறைப்பதற்கான கட்டண சீரமைப்பு நடவடிக்கைகள், வெள்ளத் தணிப்பு /சேமிப்பு நீர்மின் திட்டங்களுக்கு வரவு செலவுத் திட்ட ஆதரவு அளித்தல் போன்றவை அதில் சில நடவடிக்கைகளாகும்.
சாலைகள், பாலங்கள், கம்பி வட வழித்தடங்கள், ரயில்வே சைடிங், தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு மற்றும் மின் நிலையத்திலிருந்து அருகிலுள்ள தொகுப்பு மையம் வரை மின் பகிர்மான பாதை போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்கான செலவு, மாநில அல்லது மத்திய மின் பகிர்மான பயன்பாட்டின் துணை மின் நிலையங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு பட்ஜெட் ஆதரவு அளிக்கப்படுகிறது.
நாட்டில் நீரேற்று சேமிப்பு திட்டங்களின் (பிஎஸ்பி) வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல்கள் 2023 ஏப்ரல் 10ந்தேதி வெளியிடப்பட்டன.
மாநிலங்களுக்கிடையேயான மின் தொடரமைப்பு , நீர்மின் திட்டங்கள் மற்றும் நீரேற்று சேமிப்பு திட்டங்களுக்கான கட்டணங்களை தள்ளுபடி செய்தல்.
மாநில நிறுவனங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சி ஒத்துழைப்பு மூலம் வடகிழக்கு பிராந்தியத்தில் நீர்மின் திட்டங்களை மேம்படுத்துவதில் சமபங்கு பங்கேற்புக்காக வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மாநில அரசுகளுக்கு மத்திய நிதி உதவி.
நீர்மின் திட்டங்கள் மற்றும் பிஎஸ்பி-க்களின் விரிவான திட்ட அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக மத்திய மின்சார ஆணையம் காலக்கெடுவை குறைத்தல் ஆகியவையும் இதில் அடங்கும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 9,048 மெகாவாட் மொத்த நிறுவு திறன் கொண்ட பி.எஸ்.பி.க்கள் உட்பட 11 நீர்மின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக 8,036 மெகாவாட் திறன் கொண்ட 11 உயர் மின் திட்டங்களும், மொத்தம் 60,050 மெகாவாட் திறன் கொண்ட 44 பொதுத்துறை திட்டங்களும் நில அளவை மற்றும் புலனாய்வில் உள்ளன.
மத்திய மின்துறை இணையமைச்சர் திரு. ஸ்ரீபத் நாயக் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
***
TS/PKV/KR
(Release ID: 2080539)
Visitor Counter : 20