எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃகு உற்பத்தி திறன்

Posted On: 03 DEC 2024 5:06PM by PIB Chennai

எஃகு ஒரு முறைபடுத்தப்படாத துறையாகவும் அரசிற்கு வசதிகளை உருவாக்கித்தரும் துறையாகவும் செயல்படுகிறது. உற்பத்தித் திறனை அதிகரிப்பது தொடர்பான முடிவு, மூலப்பொருட்கள் இருப்பு, தலைதூரப் பகுதியில் உள்ள துறைமுகம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட தொழில்நுட்ப – வர்த்தக பரிசீலனைகளின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது. ஜார்க்கண்ட் உள்ளிட்ட நாட்டில் எஃகுத் துறையை ஊக்குவிப்பதற்கான உகந்த கொள்கைச் சூழலை உருவாக்க மத்திய அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது:

1.    எஃகு உற்பத்தி மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' திட்டத்தை ஊக்குவித்து விரிவுபடுத்துதல்:    

1.    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் (DMI&SP) கொள்கையை அமல்படுத்துதல், அரசின் கொள்முதலுக்காக 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' எஃகு.

2.    நாட்டிற்குள் 'சிறப்பு எஃகு' உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் மூலதன முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் இறக்குமதியைக் குறைப்பதற்கும் சிறப்பு எஃகுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டம் தொடங்கப்பட்டது. சிறப்பு எஃகுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை PLI திட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்படும் கூடுதல் முதலீடு  27,106 கோடி ரூபாயும்திறன் உருவாக்கம் சுமார் 24 மில்லியன் டன்கள் மற்றும் 14,760 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

3.    2024-25 - ம் நிதியாண்டில் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 11,11,111 கோடி ரூபாய் உச்சவரம்பு, உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்கு உத்வேகம் அளித்துள்ளது, இது எஃகு நுகர்வை அதிகரித்துள்ளது.

1.    மூலப்பொருள் கிடைப்பதை மேம்படுத்துதல் மற்றும் மூலப்பொருள் செலவைக் குறைத்தல்:-

1.    மூலப்பொருளான ஃபெர்ரோ நிக்கல் மீதான அடிப்படை சுங்க வரி 2.5 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு, வரி இல்லாத மூலப்பொருளாக மாற்ற வேண்டும்.

2.    2024 - ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை இரும்பு கழிவுகள் மீதான வரி விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

3.    உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு கழிவுகள் கிடங்கை அதிகரிக்க எஃகு கழிவுகள் மறுசுழற்சி கொள்கையை அறிவிக்கை செய்தல்.

1.    இறக்குமதி கண்காணிப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு:-

1.    உள்நாட்டு எஃகுத் தொழிலுக்கு இறக்குமதி குறித்த விவரங்களை வழங்குவதற்காக இறக்குமதியை திறம்பட கண்காணிக்க எஃகு இறக்குமதி கண்காணிப்பு அமைப்பை (SIMS) சீரமைத்தல்.

2.    எஃகு தரக்கட்டுப்பாட்டு ஆணைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் தரம் குறைந்த / குறைபாடுள்ள எஃகு பொருட்கள் உள்நாட்டு சந்தையிலும், இறக்குமதியிலும் தடை செய்யப்பட்டு, தரமான இரும்பு தொழிற்சாலைகள், பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தல். இந்த ஆணையின்படி, சம்பந்தப்பட்ட இந்திய தர நிர்ணய நிலையின் படி தரமான எஃகுகள் மட்டுமே இறுதி பயனீட்டாளர்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. தரக்கட்டுப்பாடு ஆணையின் கீழ் இதுவரை கார்பன் எஃகு, உலோகக் கலவை எஃகு மற்றும் துருப்பிடிக்காத எஃகு ஆகியவற்றை உள்ளடக்கிய 151 இந்திய தரங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

1.    பிற நடவடிக்கைகள்:-

1.    சட்டரீதியான அனுமதிகளை விரைவாகப் பெறுவதற்காக அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளுடன் ஒருங்கிணைந்து எஃகு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மிகவும் சாதகமான விதிமுறைகளில் கிடைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்.

போக்குவரத்து மற்றும் மின்சாரம் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது சமூக-பொருளாதார பரிசீலனைகள், நடப்பு திட்டங்களின் பொறுப்புகள், ஒட்டுமொத்த நிதி இருப்பு மற்றும் போட்டியிடும் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தொடர்ச்சியான மற்றும் ஆற்றல் மிக்க செயல்முறையாகும்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் திரு.எச்.டி. குமாரசாமிஇந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080159

*** 

SV/KPG/DL


(Release ID: 2080398) Visitor Counter : 18


Read this release in: English , Hindi