கனரகத் தொழில்கள் அமைச்சகம்
இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை
Posted On:
03 DEC 2024 5:18PM by PIB Chennai
இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 2023-ம் ஆண்டு சீனாவில் 16.6 மில்லியன் எண்ணிக்கை அளவிற்கு இரு சக்கர வாகனங்கள் விற்கப்பட்டன. அதே காலகட்டத்தில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மொத்த இரு சக்கர வாகனங்கள் 17.10 மில்லியனாக இருந்தன.
இந்தியாவில் முதல் நிலை இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் ஏற்கனவே நாட்டின் கிராமப்புறங்களை சென்றடைந்துள்ளனர். 25,938 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரிப் பாகங்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் 2021 செப்டம்பர் 15 அன்று அரசால் அங்கீகரிக்கப்பட்டது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகுத்துறை அமைச்சர் திரு.எச்.டி. குமாரசாமிஇத்தகவலைத் தெரிவித்தார்.
---
TS/IR/KPG/DL
(Release ID: 2080372)
Visitor Counter : 30