எஃகுத்துறை அமைச்சகம்
உள்நாட்டு எஃகு உற்பத்தியாளர்கள்
Posted On:
03 DEC 2024 5:09PM by PIB Chennai
2018-19 முதல் 2024-25 ஏப்ரல் - அக்டோபர் வரை பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முழுமை பெற்ற எஃகு பற்றிய விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எஃகுத் துறையின் வளர்ச்சிக்கு உகந்த கொள்கைச் சூழலை உருவாக்குவதன் மூலம் அரசு வசதி செய்து தரும் அமைப்பாக செயல்படுகிறது.
நாட்டில் 300 மெட்ரிக் டன் கச்சா எஃகு உற்பத்தித் திறனை எட்டவும், உள்நாட்டு எஃகு உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நாட்டிற்குள் 'சிறப்பு எஃகு' உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், மூலதன முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் இறக்குமதியைக் குறைப்பதற்கும் சிறப்பு எஃகுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைதிட்டத்தை தொடங்குதல். சிறப்பு எஃகுக்கான இத்திட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்படும் கூடுதல் முதலீடு ரூ.29,500 கோடியாகும், மேலும் சிறப்பு எஃகுக்கு சுமார் 25 மில்லியன் டன் (எம்டி) கூடுதல் திறன் உருவாக்கப்படும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் திரு.எச்.டி. குமாரசாமி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080165
------
IR/KPG/DL
(Release ID: 2080343)
Visitor Counter : 26