சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் 2024 அன்று, மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் இந்தியா முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக 16 புதுமையான முன்முயற்சிகளைத் தொடங்கினார்
Posted On:
03 DEC 2024 3:48PM by PIB Chennai
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் (MoSJE) கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் (DEPwD) சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் 2024-ஐ முன்னிட்டு, இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான 16 சிறப்புவாய்ந்த முன்முயற்சிகளை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், புதுதில்லியில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மூத்த அதிகாரிகள், பங்குதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளி கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இது அவர்களின் மகத்தான திறமை மற்றும் மீள்திறனை வெளிப்படுத்தியது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் வீரேந்திர குமார், "அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதில் நமது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இந்த முக்கியமான தருணம் பிரதிபலிக்கிறது. இந்த முன்முயற்சிகள் மூலம், ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் சம வாய்ப்புகள், அணுகல் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை நிலைநிறுத்துவதற்கான தனது பணியில் துறை உறுதியாக உள்ளது, இது உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய சமூகத்தை அடைவதற்கான குறிக்கோளை நோக்கிச் செல்வதாக உள்ளது என்றார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட சமுதாயத்தை உருவாக்குவதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய துறையின் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், "அணுகலை மேம்படுத்துவது முதல் வேலைவாய்ப்பை வளர்ப்பது வரையிலான ஒவ்வொரு நடவடிக்கையும், தடைகளை அகற்றுவதற்கும் வாய்ப்புகளுக்கான புதிய வழிகளைத் திறப்பதற்கும் எங்கள் தீர்மானத்தை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு தனிநபரும், திறனைப் பொருட்படுத்தாமல், கண்ணியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் வாழக்கூடிய சமத்துவ இந்தியா என்ற அரசின் பார்வையை இந்த முன்முயற்சிகள் உள்ளடக்கியிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080087
***
TS/MM/AG/KR/DL
(Release ID: 2080311)
Visitor Counter : 44