கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030
Posted On:
03 DEC 2024 12:45PM by PIB Chennai
கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030, இந்தியாவின் கடல்சார் துறையின் முழுமையான வளர்ச்சிக்கான ஒரு விரிவான கட்டமைப்பை வழங்குகிறது. இதில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் ஆகியவை அடங்கும். கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030 இந்தியாவை உலகளாவிய கடல்சார் தலைமைக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட 150 முன்முயற்சிகளை சுட்டிக் காட்டுகிறது.
துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாடு, தளவாட செயல்திறனை மேம்படுத்துதல், இந்திய கப்பல் கட்டும் திறனை மேம்படுத்துதல், கடலோர மற்றும் நீர்வழிப் போக்குவரத்தை அதிகரித்தல், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் கொள்கை ஆதரவை ஊக்குவித்தல், நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவித்தல், கடல்சார் சூழல் அமைப்பின் அனைத்து அம்சத்தையும் நிவர்த்தி செய்தல், இந்தியாவை ஒரு முன்னணி கடல்சார் நாடாக மாற்றுவதற்கான அணுகுமுறையை உறுதி செய்தல் போன்றவை அதனுடன் தொடர்புடையதாகும்.
2022-ம் நிதியாண்டில் ஆண்டுக்கு 1598 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்த பெரிய துறைமுகங்களின் திறன் 2024-ம் நிதியாண்டில் ஆண்டுக்கு 1630 மில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரித்துள்ளது
ii. ஒட்டுமொத்தமாக, கப்பல் செயல்பாட்டு நேரம் 2022-ம் நிதியாண்டில் 53 மணிநேரத்திலிருந்து 2024-ம் நிதியாண்டில் 48 மணிநேரமாகக் குறைக்கப்பட்டது.
iii கப்பல் கன்டெய்னர் ஏற்றும் செயல்பாட்டு திறன் 2022-ம் நிதியாண்டில் 16,000 மெட்ரிக் டன்னிலிருந்து 2024-ம் நிதியாண்டில் 18,900 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080012
**
TS/IR/KPG/KR/DL
(Release ID: 2080224)