இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம், தேசிய ஒரே சுகாதார இயக்கத்தின் கீழ் பன்னாட்டு அமைப்புகளுடன் ஆலோசனை
Posted On:
02 DEC 2024 7:35PM by PIB Chennai
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் (PSA) பேராசிரியர் அஜய் சூட், இந்தியாவில் ஒரே சுகாதாரத் துறையில் பணிபுரியும் சில முக்கிய நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய, 2024 டிசம்பர் 2 அன்று முக்கியமான ஆலோசனை அமர்வுக்கு தலைமை தாங்கினார்.
தேசிய ஒரே சுகாதார திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டில் செயல்பாடுகளை ஆதரிக்கவும், ஒருங்கிணைக்கவும் மனித, விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் துறைகளை ஒன்றிணைப்பதன் மூலம், ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு மற்றும் தொற்றுநோய் ஆயத்த நிலையை உருவாக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளை வலுப்படுத்துவதில் இந்த அமர்வு கவனம் செலுத்தியது.
இந்த அமர்வில் தேசிய ஒரே சுகாதார இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து மேலோட்டமாக விவாதிக்கப்பட்டது. வளங்களை திறம்பட பயன்படுத்துதல், தேசிய மற்றும் மாநில அளவில் திறன் மேம்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான மாதிரிகளை பரிமாறிக் கொள்வதன் மூலம், அறிவுப் பகிர்வை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் குறிப்பிட்ட பிராந்திய தேவைகளுக்கு ஏற்ப, ஒரு விரிவான மற்றும் பயனுள்ள ஒரே சுகாதார உத்தியை இந்தியா முழுவதும் செயல்படுத்துவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த கூட்டத்தில் முக்கிய பன்னாட்டு முகமைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டன. அவர்கள் ஜூனோசிஸ், ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் (ஏஎம்ஆர்) மற்றும் மனித, கால்நடை மற்றும் வனவிலங்கு துறைகளில் திறன் மேம்பாடு போன்ற ஒரே ஆரோக்கியத்தின் பல்வேறு அம்சங்களில் தங்கள் பணிகளை முன்வைத்தனர்.
பேராசிரியர் சூட் இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்த அனைத்து பங்குதாரர்களுடனும் ஒத்துழைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் ஒருங்கிணைப்புகளை அடையாளம் காண நடந்து கொண்டிருக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் பரிந்துரைத்தார்.
நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். இது AMR மற்றும் தொற்றுநோய் ஆயத்த நிலை ஆகிய இரண்டிற்கும் முக்கியமானது. வனவிலங்கு மற்றும் கால்நடைத் துறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) தலைமை இயக்குநரும், சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலாளருமான டாக்டர் ராஜீவ் பாஹல், இந்த பிரச்சினைகளை மற்ற நாடுகள் எவ்வாறு கையாள்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதன் மதிப்பையும், பன்னாட்டு முகமைகள் மூலம் வசதி செய்யக்கூடிய குறுக்கு கற்றலுக்கான வாய்ப்பையும் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பொது சேவை அலுவலகத்தின் அறிவியல் செயலாளர் டாக்டர் பர்விந்தர் மைனி, உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ஆயுஷ் துறை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், உயிரி தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை (DAHD), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (NSCS), தேசிய சுகாதார நிறுவனம் (NIOH), உலக சுகாதார அமைப்பு (WHO), உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO), உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), ஐக்கிய தேசிய மேம்பாட்டுத் திட்டம்-இந்தியா (UNDP-India), விலங்கு ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பு (WOAH), சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID), பெண்ணோயியல் மற்றும் மகப்பேறியலில் சர்வதேச கல்விக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் திட்டம் (JHPIEGO), ஆரோக்கியத்தில் பொருத்தமான தொழில்நுட்பத்திற்கான திட்டம் (PATH), புரூக் இந்தியா, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN), பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, மற்றும் இங்கிலாந்து அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
***
MM/RS/DL
(Release ID: 2079929)
Visitor Counter : 32