இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் தூதர்கள்-இளைஞர் இணைப்பு முன்முயற்சி

Posted On: 02 DEC 2024 6:33PM by PIB Chennai

"வளர்ச்சி அடைந்த பாரதம் 2047" என்பது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாறுவதற்கான கனவை நனவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும்.

இளைஞர்களிடையே 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இந்த இலக்கை முன்னெடுத்துச் செல்வதற்காக, இந்தியாவின் வளர்ச்சியில் இளைஞர்களின் தலைமைத்துவத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு "வளர்ச்சி அடைந்த பாரதத்தின் தூதர்கள் இளைஞர் இணைப்பு" என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் உள்ள இளைஞர்களுடன் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கு குறித்த விவாதிக்கும் வகையில் இது தொடர்பான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் புகழ்பெற்ற பேச்சாளர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் இளைஞர்களுக்கு கிடைக்கிறது.

கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடல்கள், பல்வேறு  அனுபவ வழிகள் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உள்ள பொறுப்புகளைப் புரிந்துகொள்வதற்கு இந்த நிகழ்வுகள் கணிசமாக பங்களிக்கின்றன.

இந்த திட்டங்கள் மூலம், தேசிய அடையாளம், மக்கள் ஈடுபாடு, சமூக ஒத்திசைவு, மனித மூலதன மேம்பாடு, அதிகாரமளித்தல் போன்ற மதிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் தங்கள் சமூகங்களுக்கு சிறப்பாக பங்களிக்க முடியும். இந்த கலந்துரையாடல்கள் தனிநபர் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தேசத்தின் கட்டமைப்பையும் வலுப்படுத்துகின்றன. இதன் ஒரு பகுதியாக மை பாரத் தளம் உள்ளது. அனுபவ கற்றல் வாய்ப்புகள், தன்னார்வ முயற்சிகள்சிக்கல்களைத் தீர்க்கும் திறன்கள், தலைமைத்துவ திறன்கள் போன்றவற்றை இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்குவதற்கான வழிமுறையை மை பாரத் கொண்டுள்ளது.

இளைஞர் தன்னார்வ நடவடிக்கைகள், பெரிய நிகழ்வுகள், அனுபவ கற்றல் திட்டங்கள், நிதி கல்வியறிவு திட்டங்கள், வழிகாட்டுதல் திட்டங்கள் போன்ற நிகழ்வுகளும் மை பாரத் டிஜிட்டல் தளம் மூலம் நடத்தப்படுகின்றன. நிகழ்வுகளின் புகைப்படங்கள்-வீடியோக்களும் தன்னார்வலர்களால் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இவற்றை விழிப்புணர்வுக்காகவும் சமூகத்தின் நலனுக்காகவும் அனைவரும் அணுகலாம். இத்தகைய ஏற்பாடு மேலும் அதிகமான இளைஞர்களை இந்த முயற்சிகளில் பங்கேற்று நன்மைகளைப் பெற அவர்களை ஊக்குவிப்பதாக அமைகிறது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

*****


(Release ID: 2079928) Visitor Counter : 26


Read this release in: English , Urdu , Hindi