நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் நிலக்கரி வாயுமயமாக்கல் நிதி ஊக்குவிப்பு திட்டத்தின் பிரிவு I & III -ன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களை நிலக்கரி அமைச்சகம் அறிவித்துள்ளது

Posted On: 02 DEC 2024 5:45PM by PIB Chennai

இத்திட்டத்தின் முதல் மற்றும் மூன்றாம் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களை அறிவித்ததன் மூலம்,  நிலக்கரி அமைச்சகம் தனது லட்சிய நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சி இந்தியாவுக்கு தூய்மையான, நிலையான நிலக்கரி எதிர்காலத்தை முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. நிதி ஊக்குவிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பின்வருமாறு:

வகை I (அரசு பொதுத்துறை நிறுவனங்கள் / அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சிகள்):

  • பாரத் நிலக்கரி வாயுமயமாக்கல் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட்
  • கோல் இந்தியா லிமிடெட் (கெய்ல் கூட்டமைப்பு-கோல் இந்தியா நிறுவனத்திற்காக)
  • கோல் இந்தியா லிமிடெட்

வகை III (செயல்விளக்கக் கருத்திட்டங்கள் / சிறிய அளவிலான உற்பத்தி அடிப்படையிலான ஆலைகள்):

  • நியூ எரா கிளீன்டெக் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட்

இந்த அறிவிப்பு பிரிவு I & III-ன் கீழ் செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் குறிப்பதுடன், இந்தியாவில் நிலக்கரி வாயுமயமாக்கலின் எதிர்காலத்தில் தொழில்துறையின் வளர்ந்து வரும் நம்பிக்கையை நிரூபிக்கிறது.

நிலக்கரி / பழுப்பு நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக, அமைச்சரவை ஒப்புதல் அளித்த ரூ. 8,500 கோடி செலவில் நிலக்கரி அமைச்சகம் நிதி ஊக்கத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது 2030-க்குள் 100 மில்லியன் டன் நிலக்கரி வாயுமயமாக்கல் என்ற இந்தியாவின் இலக்கை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். மூன்று பிரிவுகளின் கீழ் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தொழில்துறையினரிடமிருந்து வலுவான ஆர்வத்தை பெற்றுள்ளது, பிரிவு 1 மற்றும் III-ன் கீழ் ஐந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

நிலக்கரி வாயுமயமாக்கல் ஊக்குவிப்பு திட்டம் தூய்மையான நிலக்கரி தொழில்நுட்பங்களில் புதுமைகளை ஊக்குவிப்பதுடன், ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தூய்மையான எரிசக்தி எதிர்காலத்திற்கு இந்தியா மாறுவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் கார்பன் தடத்தைக் குறைத்து, இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான எரிசக்தி நிலப்பரப்புக்கு வழி வகுக்கும் அதே வேளையில், நிலையான எரிசக்தி தீர்வுகளை ஊக்குவிக்கும் முன்முயற்சிகளை முன்னெடுப்பதில் நிலக்கரி அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.

***

MM/RS/DL


(Release ID: 2079915) Visitor Counter : 30


Read this release in: English , Hindi