கலாசாரத்துறை அமைச்சகம்
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46-வது அமர்வு
Posted On:
02 DEC 2024 5:29PM by PIB Chennai
இந்தியாவில் தற்போது, 43 உலக பாரம்பரிய சொத்துக்கள் உள்ளன.
உலக பாரம்பரியக் குழுவின் 46-வது கூட்டம் புதுதில்லியில் ஜூலை 21முதல் 31 வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், "மொய்தாம்ஸ்-அஹோம் வம்சத்தின் மண்மேடு புதைகுழி அமைப்பு, சராய்தியோ, அசாம்" இந்தியாவின் 43-வது உலக பாரம்பரிய சொத்தாக பொறிக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டில் இந்தியாவின் மராத்தா ராணுவ நிலப்பரப்பின் தொடர் நியமனத்திற்கான வேட்புமனுவை இந்தியா சமர்ப்பித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட சொத்து மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் பல்வேறு புவியியல் மற்றும் புவியியல் பகுதிகளில் அமைந்துள்ள 12 கூறுகளை உள்ளடக்கியது. சல்ஹர் கோட்டை, ஷிவ்னேரி கோட்டை, லோஹாகாட், கண்டேரி கோட்டை, ராய்காட், ராஜ்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா கோட்டை, விஜயதுர்க், சிந்துதுர்க் மற்றும் செஞ்சி கோட்டை ஆகியவை இதில் அடங்கும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மாமல்லபுரம் சிற்பங்கள், தஞ்சாவூர்,கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய இடங்களில் உள்ள சோழர்கால கோயில்கள், நீலகிரி, மேற்கு தொடர்ச்சிமலை ஆகியவை தொல்லியல் பாரம்பரிய சிறப்புமிக்க இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
PKV/AG/DL
(Release ID: 2079840)
Visitor Counter : 40