ஆயுஷ்
உலகெங்கிலும் யோகாவை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது
Posted On:
29 NOV 2024 5:23PM by PIB Chennai
ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் யோகா குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், ஆரோக்கிய மையங்கள், பிற நிறுவனங்களின் மூலம் யோகா ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
யோகா தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களுக்காக 15.30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் யோகாவை ஊக்குவிக்க மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் பல முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அவற்றுள் பின்வரும் நடவடிக்கைகள் அடங்கும்.
சர்வதேச யோகா தினம் (ஐடிஒய்) ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில் ஐநா சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து யோகா தினம் ஒரு முதன்மை நிகழ்வாக மாறியுள்ளது.
கல்வி முன்முயற்சிகள், சிறப்புப் படிப்புகள் மூலம் யோகா கல்வி ஊக்குவிக்கப்படுகிறது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஆயுஷ் இருக்கைகள் நிறுவப்படுகின்றன.
யோகா சான்றிதழ் வாரியம் ஆயுஷ் அமைச்சகத்தால் நிறுவப்பட்டுள்ளது. இது யோகா வல்லுநர்கள், நிறுவனங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை வழங்குகிறது.
டிஜிட்டல் தளங்கள் மூலம் யோகாவை உலக அளவில் ஊக்குவிப்பதற்கும் பன்மொழி யோகா செயலிகள், வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.
ஆயுஷ் அமைச்சகம், வெளிநாடுகளில் இந்திய தூதரகங்கள் மூலம், யோகா விழிப்புணர்வு, ஊக்குவிப்பு திட்டங்களை தீவிரமாக நடத்துகிறது.
இந்தத் தகவலை மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
----
TS/PLM/KPG/DL
(Release ID: 2079216)
Visitor Counter : 5