தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்கள்
Posted On:
28 NOV 2024 5:01PM by PIB Chennai
2022 ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட நாட்டின் வளர்ந்து வரும் அமைப்புசாரா மற்றும் சாலையோர பொருளாதாரம் என்ற தலைப்பில் நித்தி ஆயோக்கின் மதிப்பீட்டின்படி, 2020-21-ம் ஆண்டில் நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் சாலையோர தொழிலாளர்களின் எண்ணிக்கை 7.7 மில்லியனாக இருந்தது. இது 2029-30-ம் ஆண்டுக்குள் 23.5 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதன்முறையாக, 'அமைப்புசாரா தொழிலாளர்கள்' மற்றும் 'சாலையோர தொழிலாளர்கள்' என்பதற்கான வரையறை மற்றும் அது தொடர்பான விதிகள் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சமூக பாதுகாப்பு குறியீடு, 2020-ல் வழங்கப்பட்டுள்ளன.
சமூக பாதுகாப்பு குறியீடு, 2020 வாழ்க்கை மற்றும் இயலாமை பாதுகாப்பு, விபத்து காப்பீடு, உடல்நலம் மற்றும் மகப்பேறு நன்மைகள், முதியோர் பாதுகாப்பு போன்றவற்றில் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் சாலையோர தொழிலாளர்களுக்கு பொருத்தமான சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்க வழங்குகிறது.
மாநிலங்களவையில் இன்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
----
TS/SV/KPG/DL
(Release ID: 2078778)
Visitor Counter : 6