பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி 26-வது கோட்பாடு மற்றும் உத்திசார் கருத்தரங்கில் உரையாற்றினார்
Posted On:
28 NOV 2024 5:49PM by PIB Chennai
ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இன்று மோவில் நடைபெற்ற 26வதுகோட்பாடு மற்றும் உத்திசார் கருத்தரங்கில் (டி.எஸ்.எஸ்) உரையாற்றினார். 'சமீபத்திய மோதல்கள் மற்றும் போரில் தொழில்நுட்ப உட்செலுத்துதலைக் கருத்தில் கொண்டு இந்திய ராணுவத்திற்கான தகவமைப்பு கோட்பாடுகளின் தேவை / செயல்பாட்டு தத்துவம்' என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு2024 நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ராணுவ போர் கல்லூரியில் நடத்தப்பட்டது.
சமீபத்திய மோதல்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்பத்தின் தூண்டுதலின் காரணமாக இந்திய ராணுவத்தின் நிறுவப்பட்ட கோட்பாடுகள், செயல்பாட்டு உத்திகள் மற்றும் தந்திரோபாயங்கள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் (டி.டி.பி) ஆகியவற்றின் செல்லுபடியை விமர்சன ரீதியாக ஆராய்வதும், எதிர்கால மோதல்களின் சவால்களை எதிர்கொள்ள கோட்பாடுகள், செயல்பாட்டு தத்துவங்கள் மற்றும் டி.டி.பி.களில் தேவையான மாற்றங்களை பரிந்துரைப்பதும்கருத்தரங்கின் நோக்கமாகும்.புவிசார் பாதுகாப்பு விவகாரங்கள், புவிசார் அரசியல் விவகாரங்கள், ஆயுதப்படைகள், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பல்வேறு செயல்பாட்டு மற்றும் தளவாட அம்சங்கள் மற்றும் நவீன போர் சூழலில் ஆயுதப்படைகளின் திறன் மேம்பாடு குறித்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078589
***
TS/MM/AG/DL
(Release ID: 2078770)
Visitor Counter : 8