இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விளையாட்டு வீரர்களுக்கான நிதி உதவி

Posted On: 28 NOV 2024 5:08PM by PIB Chennai

பல்வேறு திட்டங்கள் மூலம் நேரடி/மறைமுக நிதி உதவிகளை வழங்குவதன் வாயிலாக விளையாட்டை ஒரு தொழிலாக தொடர மத்திய அரசு ஊக்குவிக்கிறது:

  1. கேலோ இந்தியா திட்டத்தின் "கேலோ இந்தியா விளையாட்டு ​& பயிற்சி மையங்கள்" பிரிவின் கீழ், அடையாளம் காணப்படும் திறமையான விளையாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும் பயிற்சிக்கான செலவுகள், போட்டிகள் மூலம் திறமைகளை வெளிக்கொண்டு வருவது, கல்வி, விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றிற்காக ஆண்டுதோறும் ₹6.28 லட்சம் ரூபாய் [மாதத்திற்கு ₹10,000/-ரூபாய் கைச்செலவு உட்பட] நிதி உதவியும் வழங்கப்பட்டது. மேலும், கேலோ இந்தியா திட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்கள் வாயிலாக, பதக்கம் வென்ற முன்னாள் விளையாட்டு வீரர்கள், இளம் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியாளர்களாக / வழிகாட்டிகளாக பணியமர்த்தப்படுகிறார்கள். அவர்கள் இந்த விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள்.
  2. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் திட்டத்தின் கீழ், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு உதவி செய்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு அமைச்சகத்தின் வழக்கமான திட்டங்களின் கீழ் கிடைக்காத தனிப்பயிற்சி,பிற உதவிகளுக்காக தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படுகிறது. முக்கிய விளையாட்டுகளில் குழு விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் சொந்த செலவுகளுக்காக மாதந்தோறும் ₹50,000/- ரூபாய் வழங்கப்படுகிறது. இது தவிர, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான பிரிவின் கீழ் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களின் பயிற்சித் திட்டத்திற்கான முழு முழு செலவுத் தொகையும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. குழு தடகள வீரருக்கு 25,000/- ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
  3. தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கும் நிதியுதவி அளிக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது, தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது, இந்தியாவில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது, வெளிநாட்டு பயிற்சியாளர்கள் / உதவிப் பணியாளர்களை பயிற்சியில் ஈடுபடுத்துவது, அறிவியல் மற்றும் மருத்துவ உதவி போன்றவற்றிற்கு தேவையான அனைத்து உதவிகளும் இதில் அடங்கும்.
  4. விளையாட்டு வீரர்களுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நல நிதி திட்டத்தின் கீழ், நலிந்த நிலையில் வாழும் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான பயிற்சி, விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது போன்றவற்றுக்கு நேரடி நிதி உதவி (2.50 லட்சம் ரூபாய் வரை) மத்திய அரசு வழங்குகிறது.
  5. சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், அவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தின் வாயிலாக நிதி உதவி அளிக்கப்படுகிறது. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுத் தொகை மூலம் உத்தரவாதமான மாத வருமானம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன். தற்போதுள்ள திட்டத்தின் கீழ், தகுதியான முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ₹12,000/- ரூபாய் முதல் ₹20,000/- ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
  6. ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள் வேறு தொழிலுக்கு மாறுவதற்குத் தேவையான அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான திட்டத்தையும் மத்திய தொடங்கியுள்ளது. இந்த திட்டம் லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
  7. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ், தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உயர்ந்த அளவில் சாதனைகள் புரிய ஊக்கப்படுத்தவும், இளைய தலைமுறையினர் விளையாட்டில் பங்கேற்க ஊக்கமளிக்கும் வகையில் முன்மாதிரியாக திகழவும் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரொக்கப் பரிசு 20,000/- ரூபாய் முதல் 75,00,000/- ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
  8. சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், அவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தின் வாயிலாக நிதி உதவி அளிக்கப்படுகிறது. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுத் தொகை மூலம் உத்தரவாதமான மாத வருமானம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன். தற்போதுள்ள திட்டத்தின் கீழ், தகுதியான முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ₹12,000/- ரூபாய் முதல் ₹20,000/- ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
  9. ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள் வேறு தொழிலுக்கு மாறுவதற்குத் தேவையான அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான திட்டத்தையும் மத்திய தொடங்கியுள்ளது. இந்த திட்டம் லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
  10. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ், தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உயர்ந்த அளவில் சாதனைகள் புரிய ஊக்கப்படுத்தவும், இளைய தலைமுறையினர் விளையாட்டில் பங்கேற்க ஊக்கமளிக்கும் வகையில் முன்மாதிரியாக திகழவும் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரொக்கப் பரிசு 20,000/- ரூபாய் முதல் 75,00,000/- ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
  11. மேற்கண்ட திட்டங்கள் தவிர, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வகையில் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது மற்றும் துரோணாச்சார்யா விருது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விளையாட்டு விருதுகள் ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

*****

 

TS/SV/AG/DL


(Release ID: 2078768) Visitor Counter : 6


Read this release in: English , Urdu , Hindi