வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
அம்ருத் 2.0 சிறப்பம்சங்கள்
Posted On:
28 NOV 2024 3:14PM by PIB Chennai
நகர்ப்புறங்களை புனரமைத்து மேம்படுத்துவதற்கான அடல் மிஷன் (AMRUT) 2.0 திட்டம் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் 2021-ம் ஆண்டு அக்டோபர் 01-ந் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 500 அம்ருத் நகரங்களில் கழிவுநீர் மேலாண்மைக்கான அம்ருத் 2.0 திட்டம் கவனம் செலுத்தி வருகிறது. நீர்நிலைகள், பசுமை இடங்கள் மற்றும் பூங்காக்களை மேம்படுத்துவது நீர்வள மேலாண்மையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது போன்ற அம்சங்கள் இத்திட்டத்தில் அடங்கும். அம்ருத் 2.0 திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டுச் செலவு ஐந்தாண்டுகளில் 2,99,000 கோடி ரூபாய் ஆகும். இதில் மத்திய அரசின் பங்களிப்பு ஐந்து ஆண்டுகளுக்கு 76,760 கோடி ரூபாய் ஆகும்.
அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், 1,89,458.55 கோடி ரூபாய் (செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவு உட்பட) செலவு மதிப்பீட்டில் மொத்தம் 8,998 திட்டங்களுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. திட்டங்களுக்கான நிதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்படுகிறது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் / செயல்படுத்தும் முகமைகளுக்கு இந்த நிதி விடுவிக்கப்படுகின்றன.
அம்ருத் 2.0 திட்டத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் நீர் மேலாண்மை திட்டங்களை குறித்த காலத்திற்குள் முடித்து 2 ஆண்டுகளுக்குள் ஒப்புதல் பெற வேண்டும். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களுக்கான மத்திய நிதி பங்களிப்பு 63,976.77 கோடி ரூபாயில் இதுவரை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ரூபாய் 11756.13 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அம்ருத் 2.0 திட்டத்திற்கான இணையதளத்தில் (15.11.2024 நிலவரப்படி) மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தரவுகள் அடிப்படையில், 85,114.01 கோடி ரூபாய் மதிப்பிலான 4,916 திட்டங்களுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 1198 திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்யும் நிலையில் உள்ளன. இந்த செயல்முறையை விரைவுபடுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மக்களவையில் இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு. டோகான் சாஹு இந்த பதிலை அளித்தார்.
***
TS/SV/RR/KR/DL
(Release ID: 2078621)
Visitor Counter : 8