அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நவீன தொழில்நுட்பங்களில் உலகின் முன்னணி நாடாக இந்தியா விரைவாக வளர்ந்து வருகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
27 NOV 2024 6:59PM by PIB Chennai
ஆசிய பசிபிக் அளவியல் திட்ட (APMP) பொதுச் சபைக் கூட்டத்தில் மத்திய அறிவியல் - தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லியில் இன்று பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அளவியல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களில் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆற்றலை எடுத்துரைத்தார். கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதிலும், புத்தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதிலும், அளவியல் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் கூறினார்.
குவாண்டம் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் இந்தியாவின் முக்கிய பங்கையும் அவர் சுட்டிக் காட்டினார். குவாண்டம் தொழில்நுட்பங்களுக்கான அளவியல்” என்ற கருப்பொருளில் பேசிய அமைச்சர், புதுமைகளை மேம்படுத்துவதற்கும், தொழில்துறை போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும், துல்லியமான அளவீட்டுத் தரங்கள் முக்கியமானவை என்று அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் தேசிய இயற்பியல் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அழியாத மை (NPLI), 37 நாடுகளில் உள்ள தேர்தல்களில் பயன்படுத்தப்படுகிறது எனவும் இது உலக அரங்கில் இந்தியாவின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
குவாண்டம் அறிவியல், செமிகண்டக்டர்கள், பசுமை எரிசக்தி போன்ற தொழில்நுட்பங்களுக்கான வலுவான தரமான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அமைச்சர் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலான சிஎஸ்ஐஆர்-ன் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி, உலகளாவிய அளவியல் வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
*****
PLM/KPG/DL
(Release ID: 2078206)
Visitor Counter : 6