கூட்டுறவு அமைச்சகம்
நாட்டில் உள்ள தொடக்க வேளாண் கடன் சங்கங்களை டிஜிட்டல் மயமாக்குதல்
Posted On:
27 NOV 2024 4:40PM by PIB Chennai
கூட்டுறவு வங்கிகளில் இணைய வழி வங்கிச் சேவை, மொபைல் வங்கிச் சேவை. மின்னணு வங்கிச் சேவைபோன்ற நவீன வங்கி நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
மாநில, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் 2015-ம் ஆண்டு வரை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இணைய வங்கி வசதிகளை வழங்க அனுமதிக்கப்படவில்லை. இந்த வங்கிகள் டிஜிட்டல் அடிப்படையிலான சேவைகளை வழங்க ஏதுவாக ரிசர்வ் வங்கி 2015 நவம்பர் 5-ம் தேதி அனுமதி வழங்கியது. மேலும், கூட்டுறவு வங்கிகள் இதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 08.10.2008 முதல் மொபைல் வங்கிச் சேவையை வழங்க அனுமதி அளிக்கப்பட்டன.
இணையவழி வங்கிச் சேவை வசதியை வழங்கும் மாநில மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் எண்ணிக்கை விவரம் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.
மாநிலம் மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் இணையதள சேவைகள் மூலம் கிராமப்புறங்களில் டிஜிட்டல் வங்கிச் சேவையை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, தற்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிதிசார் பரிவர்த்தனை வசதிகளுன் கூடிய இணைய வங்கிச் சேவையை வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
அனைத்து ஊரக கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைந்த இணையதள வங்கிச் சேவையுடன் கொண்டு வருவதற்கான செயல்முறையை நபார்டு ஊக்குவித்தது. இது தொடர்பான ஒரு சிறப்பு முயற்சி, 16 மாநிலங்கள் மற்றும் 03 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 6,953 கிளைகளைக் கொண்ட 201 மண்டல கூட்டுறவு வங்கிகள் (14 மாநில கூட்டுறவு வங்கிகள், 187 மாவட்ட கூட்டுறவு வங்கிகள்) ஆகியவை இந்தக் கூட்டுறவு திட்டத்தில் சேர உதவியது.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டத்தின் கீழ், மொத்தம் ரூ.865.8 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்ட நிதி குறித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் விவரங்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு மொத்தம் 107.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 44.68 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு மொத்தம் 29.23 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு மொத்தம் 1.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 0.61 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு மொத்தம் 0.41 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077947
-----
TS/SV/KPG/DL
(Release ID: 2078200)
Visitor Counter : 4