உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தடயவியல் ஆய்வகங்களுக்கான ஒழுங்குமுறை

Posted On: 27 NOV 2024 4:45PM by PIB Chennai

'காவல்துறை', 'பொது ஒழுங்கு' ஆகியவை இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின்  கீழ் மாநில துறைகள் ஆகும்.

நாட்டில் தடயவியல் ஆய்வகங்களையும் தடயவியல் உள்கட்டமைப்பையும் மேம்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள  நடவடிக்கைகளில் சில:

(i) போபால், குவஹாத்தி, புனே, கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகங்களை நவீனப்படுத்துதல்.

(ii) போதைப் பொருட்கள், மரபணு தடய பகுப்பாய்வு, தடய உளவியல் ஆகிய புதிய பிரிவுகளில் ஆய்வகங்களில் உள்ள இயந்திரங்கள், உபகரணங்களை மேம்படுத்துதல்.

(iii)  மத்திய உள்துறை அமைச்சகம் 04.09.2015 தேதியிட்ட கடிதத்தில், தடயவியல் ஆவண பரிசோதகர்கள், விரல் ரேகை பரிசோதகர்கள் உள்ளிட்டோரின் பணிகளை ஒழுங்குபடுத்த தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்குமாறு நாட்டில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

(iv) சண்டிகரில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் அதிநவீன மரபணு பகுப்பாய்வு, ஆராய்ச்சி, மேம்பாட்டு வசதியை  உருவாக்குதல்.

(v) ஐதராபாத்தில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் தேசிய இணையதள தடய அறிவியல் ஆய்வகத்தை அமைத்து டிஜிட்டல் மோசடி  தொடர்பான முக்கிய வழக்குகளை விசாரித்தல்.

(vi) நாட்டில் உள்ள 117 தடய அறிவியல் ஆய்வகங்களை (மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்தவை)இணைக்கும் வகையில் மின்னணு தடய அறிவியல் தகவல் தொழில்நுட்ப தளத்தை செயல்படுத்துதல்.

(vii) சம்பாவில் (ஜம்மு - காஷ்மீர்) ரூ.99.76 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டில் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தை நிறுவ உள்துறை அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

(viii) நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தரமான, பயிற்சி பெற்ற தடயவியல் வல்லுனர்கள் உருவாக்குவதற்காக தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் (NFSU) அமைக்கப்பட்டுள்ளது.

(ix) 2024-25 முதல் 2028-29 நிதியாண்டு வரை மொத்தம் ரூ.2254.43 கோடி நிதி ஒதுக்கீட்டில் தேசிய தடய அறிவியல் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டத்திற்கு அமைச்சரவை 19.06.2024 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077952

-----

TS/PLM/KPG/DL


(Release ID: 2078160) Visitor Counter : 9


Read this release in: English , Hindi