கூட்டுறவு அமைச்சகம்
செயல்பாட்டில் இருக்கும் முதன்மை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள்
प्रविष्टि तिथि:
27 NOV 2024 4:39PM by PIB Chennai
தேசிய கூட்டுறவு தரவுத்தள இணையதளத்தில் உள்ள தரவுகளின் அடிப்படையில், 20.11.2024 நிலவரப்படி, நாட்டில் 1,01,524 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன. மாநில வாரியாக தொடக்க வேளாண் சங்கங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழ்நாட்டில் 4,516 சங்கங்களும், புதுச்சேரியில் 53 சங்கங்களும் செயல்பாட்டில் உள்ளன.
தற்போது செயல்பாட்டில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டத்தின் கீழ், மொத்த நிதிச் செலவு ரூ.2,516 கோடியாகும். . மொத்த பட்ஜெட் ஒதுக்கீட தொகையான ரூ.2,516 கோடியில், மத்திய அரசு , மாநில அரசுகள் மற்றும் நபார்டு வங்கியின் பங்களிப்பாக முறையே ரூ.1528 கோடி, ரூ.736 கோடி மற்றும் ரூ.252 கோடி ஆகும்.
இதுவரை, 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 67,930 தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.865.81 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
---
TS/SV/KPG/DL
(रिलीज़ आईडी: 2078138)
आगंतुक पटल : 62